தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Curry Leaves Rice : லஞ்ச் பாக்ஸ் ரெசிபி – கறிவேப்பிலை சாதம்! ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்தது!

Curry Leaves Rice : லஞ்ச் பாக்ஸ் ரெசிபி – கறிவேப்பிலை சாதம்! ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil
Aug 04, 2023 10:30 AM IST

இந்த கறிவேப்பிலை பொடியை நீங்கள் அதிகமாக செய்து, காற்றுப்புகாதா டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். இதை எப்போது சாதம் மிஞ்சிவிட்டாலும் அதனுடன் சேர்த்து சாப்பிட்டுக்கொள்ளலாம். நீங்கள் சேமிக்க விரும்பினால், தேங்காய் சேர்க்க வேண்டாம். ஏனெனில் தேங்காய் சேர்த்தால் விரைவில் கொட்டுவிடும்.

கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி?
கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்திற்கு பின்னர் என பல்வேறு நன்மைகளை கொடுக்கக்கூடியது இந்த கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலை சாதத்தை காலையில் செய்வது எளிதான ஒன்றுதான். லஞ்ச் பாக்ஸ்க்கும் கொடுத்துவிடலாம். அதற்கு கறிவேப்பிலையை நன்றாக அலசி, உலர்த்தி, துடைத்து வைக்க வேண்டும். இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீங்கள் காலையில் செய்யப்போகிறீர்கள் என்றால் முந்தைய நாள் இரவே இந்த சுத்தம் செய்யும் வேலையை முடித்து வைத்துக்கொண்டீர்கள் என்றால் நல்லது. அப்போதுதான் கறிவேப்பிலை உலர்ந்து சமைக்க ஏதுவாக இருக்கும்.

இதை சமைக்க சரியாக ஒருமணி நேரத்துக்குள்தான் செலவாகும்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 2 கப்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் – ஒரு சிட்டிகை

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – நன்றாக சுத்தம் செய்து உலர்த்தியது

உளுந்து – 2 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

பூண்டு – 2 பல்

வர மிளகாய் – 5

மிளகு – 5

தேங்காய் – 2 ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

செய்முறை

பாஸ்மதி அரிசியை நன்றாக சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பருப்பு வகைகள், பூண்டு, மிளகு, மிளகாய், தேங்காய் ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை மிதமான தீயில் கருகாமல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை சேர்த்து, நன்றாக அதையும் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாக வறுத்து எடுக்க 10 – 15 நிமிடங்கள் தேவைப்படும். பின்னர் அனைத்தையும் நன்றாக ஆறவைக்க வேண்டும்.

அனைத்தையும், காய்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு, கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு கடாயில், எண்ணெயை சூடாக்கி, கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் சமைத்த பாஸ்மதி அரிசி மற்றும் கறிவேப்பிலை தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, அடுப்பை அனைக்க வேண்டும்.

அனைத்தையும் ஒன்றாக கலந்துவிடவேண்டும். தேவைப்பட்டால் உப்பு சேர்துதுக்கொள்ளுங்கள்.

இந்த கறிவேப்பிலை பொடியை நீங்கள் அதிகமாக செய்து, காற்றுப்புகாதா டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். இதை எப்போது சாதம் மிஞ்சிவிட்டாலும் அதனுடன் சேர்த்து சாப்பிட்டுக்கொள்ளலாம். நீங்கள் சேமிக்க விரும்பினால், தேங்காய் சேர்க்க வேண்டாம். ஏனெனில் தேங்காய் சேர்த்தால் விரைவில் கொட்டுவிடும்.

புதிதாக பறித்த அல்லது வாங்கி கறிவேப்பிலையை மட்டுமே வைத்து செய்யுங்கள். அப்போதுதான், சுவை நன்றாக இருக்கும்.

நல்லெண்யைல் சமைக்க இன்னும் சுவை அதிகரிக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்