Curry Leaves Gravy : கறிவேப்பிலையை தாளிப்பில் சேர்த்து தூக்கியெறியவேண்டாம்; இதுபோல் செய்யுங்கள், முழு பலன் உறுதி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Curry Leaves Gravy : கறிவேப்பிலையை தாளிப்பில் சேர்த்து தூக்கியெறியவேண்டாம்; இதுபோல் செய்யுங்கள், முழு பலன் உறுதி!

Curry Leaves Gravy : கறிவேப்பிலையை தாளிப்பில் சேர்த்து தூக்கியெறியவேண்டாம்; இதுபோல் செய்யுங்கள், முழு பலன் உறுதி!

Priyadarshini R HT Tamil
Aug 26, 2024 10:57 AM IST

Curry Leaves Gravy : கறிவேப்பிலையை தாளிப்பில் சேர்த்து தூக்கியெறியவேண்டாம்; இதுபோல் செய்யுங்கள், முழு பலன் உறுதியாகக் கிடைக்கும்.

Curry Leaves Gravy : கறிவேப்பிலையை தாளிப்பில் சேர்த்து தூக்கியெறியவேண்டாம்; இதுபோல் செய்யுங்கள், முழு பலன் உறுதி!
Curry Leaves Gravy : கறிவேப்பிலையை தாளிப்பில் சேர்த்து தூக்கியெறியவேண்டாம்; இதுபோல் செய்யுங்கள், முழு பலன் உறுதி!

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையில் இருந்து எளிதாகச் செய்யக்கூடிய ஒரு ரெசிபி உங்களுக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. செய்து பார்த்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்

வரமிளகாய் – 7

வரமல்லி விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

வெல்லம் – ஒரு ஸ்பூன் (பொடித்தது)

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – இரு கைப்பிடியளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

பூண்டு – ஒரு கப் (தோல் நீக்கி இடித்தது)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், வரமிளகாய், புளி சேர்த்து வறுக்கவேண்டும். வரமல்லி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இவை நன்றாக வாசம் வரும் வரை வதங்கியவுடன், இதை இறக்கி ஆறவைக்கவேண்டும்.

வறுத்து ஆறவைத்த அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் பொடித்த வெல்லம், உப்பு, 2 கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன், கடுகு சேர்த்து பொரிந்ததும், இடித்த பூண்டு சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் அரைத்த அனைத்தையும் அதில் சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு தேவைப்பட்டால் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவேண்டும். நன்றாக கொதித்தவுடன் வாசம் வரும். அப்போது இறக்கிவிடவேண்டும்.

இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவைஅள்ளும். இந்த துவையல் அல்லது தொக்கை நீங்கள் ஃபிரிட்டிஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். 

அப்படி நீங்கள் இருப்பு வைத்தால், தேவைப்படும்போது எடுத்து ஆறவைத்து, சூடாக்கிக்கொள்ளவேண்டும். இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

வெரைட்டி ரைஸ் செய்து, லஞ்ச் பாக்ஸ் மற்றும் சுற்றுலாக்களுக்கும் எடுத்துச்செல்லாம் அல்லது வெரைட்டி ரைஸ் விருந்துகளிலும் ஒரு சாதமாக செய்து கொள்ளலாம். இதில் மிளகு, வரமிளகாய் இரண்டும் சேர்ப்பதால், காரம் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் காரஅளவுக்கு ஏற்ப இரண்டின் அளவையும் கவனமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.