Morning Quotes : தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழைச்சாறை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்!
Morning Quotes : தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழைச்சாறை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
கற்றாழை பல்வேறு ஆரோக்கிய கோளாறுகளை சரிசெய்யும் ஒரு மூலிகை மருந்தாகும். இதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவே ஒவ்வொரு வீட்டிலும் கற்றாழைச் செடியை தொட்டியில் வைத்து வளர்க்கவேண்டும். இதில் இருந்து சாறு எடுத்து காலையில் தினமும் பருகவேண்டும். இந்திய வீடுகளில் இது எண்ணற்ற விஷயங்களுக்காக பலமுறைகளில் பருகப்படுகிறது. இது உடல் எடை குறைப்பு, சரும ஆரோக்கியம், செரிமானம், நீர்ச்சத்தை உடலில் அதிகரிக்க, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த என பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்தது. இந்த நன்மைகளுக்காக உங்கள் அன்றாட வழக்கத்தில் இதை நீங்கள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
உடல் எடை குறைப்பு
நீங்கள் சில கிலோ எடை குறைக்க விரும்பினால், கற்றாழைச்சாறை தினமும் காலையில் பருகலாம். இது உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. இது கலோரிகளை எரிக்கும் தன்மை கொண்டது.
சரும ஆரோக்கியம்
பளபளக்கும் சருமம் பெறவேண்டுமா? உங்கள் காலையை கற்றாழைச்சாறுடன் துவங்கினால், அது உங்களுக்கு முகப்பருக்களற்ற, தெளிவான சருமத்தைத்தரும். உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
இதில் உள்ள நீர்ச்சத்து உங்கள் சருமத்தை சுருக்கங்கள் அற்றதாகவும், மிருதுவானதாகவும் வைத்திருக்கும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கரும்புள்ளிகளை அகற்றுகிறது. தினமும் காலையில் கற்றாழைச் சாற்றை பருகினால், உங்கள் சருமம் பளபளக்கும், சருமத்தின் நிறம் அதிகரித்து பளபளவென மின்னுவீர்கள்.
செரிமான ஆரோக்கியம்
உங்கள் குடலை ஆற்றும் தன்மைகொண்டது கற்றாழைச்சாறு, செரிமான கோளாறுகளை நீக்கி, நாள் முழுவதும் அவை எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது. அல்சர், வாயுத்தொல்லை, அசிடிட்டி இருப்பவர்களுக்கு இது இயற்கை மருந்தாகிறது. கற்றாழை கொழுப்பை கரைக்கிறது. இதில் உள்ள சக்திவாய்ந்த எண்சைம்கள், உங்கள் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
இதன் குளிர்விக்கும் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், வயிற்றில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. தினமும் கற்றாழைச்சாறை பருகினால், அது உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. உங்கள் குடல் நுண்ணுயிர்களின் ஆரோக்கியத்தை காக்கிறது.
நீர்ச்சத்து
உங்கள் உடலுக்கு நீர்ச்சத்தை கொடுப்பதில் கற்றாழைச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அள்ளித்தரும். இதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்துக்கள், உங்கள் உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலை நீர்ச்சத்துடன் வைக்கிறது. எலக்ட்ரோடலைட் தன்மை நீங்கள் கடும் வெயிலில் பணிபுரியும்போது, வியர்வை மூலம் உடல் இழக்கும் தண்ணீரின் அளவை சரிசெய்கிறது.
எனவே நீங்கள் கற்றாழைச்சாறை பருகுவது உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் உடற்பயிற்சிகள் செய்யும்போது உங்களுக்கு தேவையான ஆற்றலைத்தருகிறது.
நோய் எதிர்ப்புத்தன்மை
உங்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டால், நீங்கள் கற்றாழைச் சாறு பருகுவது நல்லது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கச் செய்யும். இதில் வைட்டமின் சி, பி 12, இ ஆகியவை அதிகம் இருக்கும். கற்றாழையில் உள்ள ஃபோலிக் அமிலச்சத்துக்கள், உங்களுக்கு ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமல் காக்கிறது.
இது உங்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்களை குறைத்து நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. அரைகப் கற்றாழைச் சாறு பருகுவது உங்களை நோய்களில் இருந்தும், பருவ கால தொற்றுகளில் இருந்தும் காக்கிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
தொடர்புடையை செய்திகள்