Girl Baby Names : ‘ச‘ வரிசையில் உங்கள் பெண் குழந்தைக்கு ஏற்ற பெயர்கள்! செல்ல மகள்களுக்கு சூட்டி மகிழுங்கள்!
Girl Baby Names : ‘ச‘ வரிசையில் உங்கள் பெண் குழந்தைக்கு ஏற்ற பெயர்கள்! செல்ல மகள்களுக்கு சூட்டி மகிழுங்கள்!
‘ச‘ என்ற எழுத்தில் துவங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்டி மகிழுங்கள்.
‘ச‘ என்ற எழுத்தில் துவங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள்
உங்கள் பெண் குழந்தைகளுக்கு பெயர்களை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும். ஏனெனில் உங்கள் பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் தொடர்ந்து வரும் என்பதால், அதை தேர்வு செய்வதில் உங்களுக்கு மெனக்கெடல் தேவை.
அழகான, மார்டனான மற்றும் அர்த்தமுள்ள பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தேர்ந்தெடுத்து உங்கள் குழந்தைகளுக்கு வைத்து மகிழுங்கள். இங்கு ‘ச’ வரிசைப் பெயர்கள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் குழந்தைகளுக்கு வசீகரத்தை ஏற்படுத்தக்கூடிய பெயர்கள் இவை. இவற்றை வைத்து அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குங்கள்.
சான்வி
சான்வி என்றால், லட்சுமி என்ற கடவுளின் பெயராகும். சான்வி என்பது வளம் மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. இது உங்களின் பெண் குழந்தைகளுக்கு குறிப்பாக உங்கள் வாழ்வில் ஒளியேற்ற வந்த பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் தனித்துவமான பெயர்.
சமைரா
சமைரா என்றால், கடவுள் பாதுகாப்பவர் அல்லது மயக்கும் தன்மை கொண்டவர் என்று பொருள். இது வசீகரம் நிறைந்த மற்றும் கடவுளின் கருணை என்பதை சுட்டிக்காட்டும் பெயர் ஆகும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு வைக்க விரும்பும் பெயராக இந்தப்பெயர் உள்ளது.
சான்யா
சான்யா என்றால், அறிவாளி, அறிவொளி, அறிவுச்சுடர் என்று பொருள். இந்தப் பெயரை வைத்திருக்கும் பெண் குழந்தைகள் பிரகாசமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் மின்னுகிறார்கள் என்று பொருள்.
சாரா
சாரா என்றால் இளவரசி, அரண்மனையில் உள்ள பெண் என்பதை குறிக்கிறது. இந்தப்பெயர் அனைத்து காலத்துக்கும் ஏற்ற பெயர். எப்போது வைத்தாலும், மார்டனாக இருக்கும். இது கருணையைக் குறிக்கிறது மற்றும் நளினத்தை சுட்டிக்காட்டுகிறது. இது உங்கள் வீட்டின் இளவரசிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். மேலும் உங்கள் இதயத்தின் அரசிக்கு ஏற்ற பெயர்.
ஷனாயா
ஷனாயா என்றால் சூரியனின் முதல் கதிர் என்று பொருள். அதாவது புதிய துவக்கம், ஒளிமயமான எதிர்காலம் என்பதை இந்தப்பெயர் குறிக்கிறது. சூரியனின் முதல் கதிர் எத்தனை இதமானது. அதேபோன்றதொரு இதத்தை இந்தப் பெயரும் தரும்.
ஷிவானி
ஷிவானி என்றால் வாழ்வு மற்றும் மரணம் என்று அர்த்தம். பார்வதி தேவியின் பெயர். ஆன்மீகத்துடன் ஆழ்ந்த தொடர்பு உடையவர் என்பதை இந்தப்பெயர் குறிக்கிறது. இது உள்ளார்ந்த பலத்தைக் காட்டுகிறது.
ஸ்ருதி
ஸ்ருதி என்றால், கேட்கப்படும் குரல் என்று பொருள், புனிதமான வார்த்தை என்ற இன்னொரு அர்த்தமும் உள்ளது. இது ஞானம் மற்றும் அறிவொளியைக் குறிக்கும். நல்ல பெண், சரியான பெண், வாழ்வில் பெரிய விஷயங்களை சாதிக்கக்கூடியவள் என்ற பொருளை இந்தப்பெயர் கொடுக்கிறது.
சியா
சியா என்றால் வெற்றி அல்லது பயபத்தி கொண்டவர் என்ற அர்த்தத்தை குறிக்கிறது. இந்து சக்தி வாய்ந்த மற்றும் மரியாதையான குணம் கொண்டவர் என்பதை குறிக்கும் பெயர் ஆகும். இது பெருமையையும், சாதனையையும் குறிக்கும்.
சித்தாரா
சித்தார என்றால் நட்சத்திரம், ஜொலிப்பவர் என்ற பொருளைத்தருகிறது. வழிகாட்டும் ஒளி என்ற பொருளும் இந்தப் பெயருக்கு உண்டு, வாழ்வில் அவர்கள் விரும்பும் நபருக்கான வழிகாட்டி என்பதை இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்