Mullangi Chutney :முள்ளங்கி சட்னி இப்படி செய்து கொடுங்க.. அப்புறம் பாருங்க தினமும் கேட்பாங்க.. அவ்வளவு சுவையா இருக்கும்!-how to make tasty healthy mullangi chutney - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mullangi Chutney :முள்ளங்கி சட்னி இப்படி செய்து கொடுங்க.. அப்புறம் பாருங்க தினமும் கேட்பாங்க.. அவ்வளவு சுவையா இருக்கும்!

Mullangi Chutney :முள்ளங்கி சட்னி இப்படி செய்து கொடுங்க.. அப்புறம் பாருங்க தினமும் கேட்பாங்க.. அவ்வளவு சுவையா இருக்கும்!

Divya Sekar HT Tamil
Aug 24, 2024 02:40 PM IST

Mullangi Chutney : முள்ளங்கி சுவை மற்றும் ஆரோக்கியமும் நிறைந்தது. அதை சாப்பிடுவதால், உங்கள் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். மேலும் முள்ளங்கி சட்னி எப்படி செய்வது என்பது குறித்தும் பார்க்கலாம்.

Mullangi Chutney :முள்ளங்கி சட்னி இப்படி செய்து கொடுங்க.. அப்புறம் பாருங்க தினமும் கேட்பாங்க.. அவ்வளவு சுவையா இருக்கும்!
Mullangi Chutney :முள்ளங்கி சட்னி இப்படி செய்து கொடுங்க.. அப்புறம் பாருங்க தினமும் கேட்பாங்க.. அவ்வளவு சுவையா இருக்கும்!

எண்ணெய் 2 டீஸ்பூன்

தேங்காய் 3 டீஸ்பூன்

இஞ்சி சிறு துண்டு

உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் 4

புளி சிறு துண்டு

கொத்தமல்லி சிறிது

அசாஃபோடிடா சிட்டிகை

சுவைக்கு உப்பு

தாளிக்க

எண்ணெய் 1 டீஸ்பூன்

கடுகு 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய்

கறிவேப்பிலை

செய்முறை

முள்ளங்கி காய் பிடிக்காதவர்களுக்கு இந்த மாதிரி நீங்க சட்னி செய்து கொடுங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் பலருக்கு இந்த முள்ளங்கி வாசனை என்பது பிடிக்காது. அதனால் முள்ளங்கி சாம்பார் வைத்தால் அதனை அவர்கள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். முள்ளங்கியே பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் நீங்கள் முள்ளங்கி சட்னி செய்து கொடுத்தால் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். சுவையான முள்ளங்கி சட்னி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

நன்கு வேகும் வரை வதக்கவும்

ஒரு முள்ளங்கியை எடுத்துக் கொள்ளுங்கள் அதனை தோல் சீவி நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதனை ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்த முள்ளங்கியை அதில் சேர்த்து சிம்மில் வைத்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அதனை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுத்து விட்டு நான்கு வர மிளகாய், சிறிது துண்டு இஞ்சி, 4 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், சேர்த்து அதனை நன்கு வதக்கவும்.

இப்போது அடுப்பை அணைத்துவிட்டு சிறிது புளி துண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் அதில் கொஞ்சமாக கொத்தமல்லி தழை பெருங்காயம் சேர்த்து பின்பு வதக்கி வைத்த முள்ளங்கியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சுவையான முள்ளங்கி சட்னி ரெடி

நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கள்ள பருப்பு கறிவேப்பிலை, ரெட் சில்லி சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்டினியில் சேர்க்கவும்.இப்போது கமகம வாசனையில் சுவையான முள்ளங்கி சட்னி ரெடி.

ஒருமுறை இந்த முறையில் முள்ளங்கி சட்னியை செய்து கொடுங்கள், வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் நான் முன்பு சொன்னது போலவே முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இந்த சட்னியை விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள்.

முள்ளங்கி நன்மைகள்

முள்ளங்கி சுவை மற்றும் ஆரோக்கியமும் நிறைந்தது. அதை சாப்பிடுவதால், உங்கள் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

செரிமானத்தை அதிகரிக்கிறது

முள்ளங்கி சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. முள்ளங்கியில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள், செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் பித்த உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது அமிலத்தன்மை, வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

ரத்த அழுத்த கட்டுப்பாடு

முள்ளங்கியில் அதிகளவில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். முள்ளங்கி சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்போது, ஒரு நபர் பெரும்பாலும் நோய்வாய்ப்பட ஆரம்பிக்கிறார். ஆனால் முள்ளங்கியின் வேரில் உள்ள வைட்டமின் சி ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இது சளி மற்றும் இருமலுடன் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ராடிக்கல்கள், வீக்கத்தை கட்டுப்படுதுதுகிறது.

சரும பாதுகாப்பு

வானிலை மாற்றத்தின் முதல் விளைவு ஒரு நபரின் தோலில் தெரியவரும். சூரிய ஒளி மற்றும் வெப்பம் முகத்தின் பளபளப்பை எடுத்து, சருமத்தை வறண்டதாகவும், உயிரற்றதாகவும் மாற்றுகிறது மற்றும் முகப்பரு, தடிப்புகள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தினமும் முள்ளங்கி சாறு குடித்து வந்தால், அது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, பொடுகு மற்றும் முடி உதிர்வதையும் நீக்குகிறது.

இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது

முள்ளங்கியின் வேரில் உள்ள நார்ச்சத்தின் அளவு இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

சளி மற்றும் இருமல் தொல்லை

நீங்கள் எப்போதும் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்கள் உணவில் முள்ளங்கியை சேர்க்க மறக்காதீர்கள். முள்ளங்கியின் செரிமான பண்புகள் இருமலை அகற்ற உதவுகின்றன.

சிறுநீரக ஆரோக்கியம்

முள்ளங்கியில் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்ல டையூரிடிக் பண்புகள் உள்ளன. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதன் மூலம் இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.