தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss: உடல் எடையை எளிதாகவும், விரைவாகவும் குறைக்கணுமா? - அப்போ இந்த தண்ணீர் அவசியம்

Weight Loss: உடல் எடையை எளிதாகவும், விரைவாகவும் குறைக்கணுமா? - அப்போ இந்த தண்ணீர் அவசியம்

Aarthi V HT Tamil
Jun 01, 2023 11:14 AM IST

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு கொத்தமல்லி தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும்.

உடல் எடை குறைக்க உதவும் தண்ணீர்
உடல் எடை குறைக்க உதவும் தண்ணீர்

ட்ரெண்டிங் செய்திகள்

எப்படி செய்வது?

ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் அதை வடிகட்டி தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிக்கவும். தேன் சேர்க்காமல் இருந்தால் பிரச்னை இல்லை.

இப்படிச் செய்தால் சில நாட்களில் உடல் எடையைக் குறைக்கலாம். கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். கொத்தமல்லியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அவை கனிமங்கள் நிறைந்தவை. பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் அதிகம். அதனால்தான் கொத்தமல்லி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், இரண்டு வாரங்களில் உங்கள் சருமம் பளபளக்கும் என சொல்வார்கள்.

முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்னைகளும் மறைந்துவிடும். நமது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலை அவசியம். கொத்தமல்லி எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. வெதுவெதுப்பான கொத்தமல்லி நீரைக் குடிப்பதால் உடல் சுத்தமாகும். வயிறு உப்புசம் மற்றும் வயிற்று உபாதைகள் குறையும். இது எடை குறைப்பை எளிதாக்குகிறது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. அவை மயிர்க்கால்களை பலப்படுத்துகின்றன. முடி உதிர்வதைத் தடுக்கிறது.

கொத்தமல்லி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை புண்கள் மற்றும் கொப்புளங்களைத் தடுக்கின்றன. வாய் புண்களை குறைக்கிறது. உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கொத்தமல்லி தூள் மற்றும் கொத்தமல்லி பயன்படுத்துவது மிகவும் அவசியம். இது ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னையை குறைக்கிறது. மன அழுத்தத்தைத் தடுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்