தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chicken Masala Podi : ஒரே ஒரு சிக்கன் மசாலாப்பொடி – அசைவ உணவின் சுவையை தெறிக்கவிடலாம்!

Chicken Masala Podi : ஒரே ஒரு சிக்கன் மசாலாப்பொடி – அசைவ உணவின் சுவையை தெறிக்கவிடலாம்!

Priyadarshini R HT Tamil
Sep 23, 2023 11:37 AM IST

Chicken Masala Podi : கீழேகொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் சிக்கன் மசாலாப்பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து அசைவ உணவின் சுவையையும் தெறிக்கவிடலாம்.

சிக்கன் மசாலாப்பொடி தயாரிப்பது எப்படி?
சிக்கன் மசாலாப்பொடி தயாரிப்பது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

வர மிளகாய் – கால் கிலோ

மிளகு – 50 கிராம்

சோம்பு – 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

அரிசி – 50 கிராம்

பட்டை – 50 கிராம்

கசகசா – 100 கிராம்

கறிவேப்பிலை – 5 கைப்பிடியளவு

மஞ்சள் – 50 கிராம்

பிரியாணி இலை – 20

ஸ்டார் சோம்பு – 10 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

கிராம்பு – 10 கிராம்

மரத்தி மொக்கு – 10 கிராம்

கல்பாசி – 10 கிராம்

செய்முறை

லேசானது முதல் மிதமானது வரையிலான தீயில் அனைத்தையும் தனிதனித்தனியாக வறுக்க வேண்டும்.

இதில் வர மிளகாயை வறுக்கும்போது மட்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

ஒரு கைப்பிடி கல் உப்பையும், நன்றாக வறுக்க வேண்டும்.

வறுத்த அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் உலர்த்த வேண்டும்.

இதை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் ஓராண்டு வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

இதையே குறைத்து உங்களுக்கு தேவையான அளவில் செய்துகொள்ளலாம்.

வீட்டிலேயே தயாரிக்கப்படும் சிக்கன் மசாலா உங்களின் சிக்கன் கிரேவியை மேலும் சுவையாக்குகிறது. காய்கறி வறுவலுக்கும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். வேறு அசைவ உணவுகள் தயாரிக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மீனுக்கு மட்டும் இது ஒத்துவராது.

அரைக்கிலோ கறிக்கு 2 வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, கறி ஆகியவற்றுடன், சிக்கன் மசாலாப்பொடியை சேர்க்க வேண்டும். 3 ஸ்பூன் கொத்தமல்லித்தூள், 1 ஸ்பூன் மிளகாய்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக ஊறவைக்க வேண்டும்.

தேங்காய் மசாலா அல்லது தேங்காய் பால், முந்திர மசாலா சேர்த்து செய்வது உங்கள் விருப்பம். தேவைப்பட்டால், 3 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கிவிடவேண்டும். இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூர், ஆப்பம், இடியாப்பம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ள சுவை அள்ளும்.

WhatsApp channel

டாபிக்ஸ்