தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cheese Rice Cutlet : அரிசில கட்லெட்டா? மிச்சமான சாதத்துல் ஈசியா செய்யலாம்; உருகவைக்கும் சீஸ் சுவையுடன் ருசியுங்கள்!

Cheese Rice Cutlet : அரிசில கட்லெட்டா? மிச்சமான சாதத்துல் ஈசியா செய்யலாம்; உருகவைக்கும் சீஸ் சுவையுடன் ருசியுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jun 26, 2023 10:33 AM IST

Cheese Rice Cutlet : மிச்சமான சாதத்தில், 45 நிமிடத்தில் ஈசியா செய்யலாம் இந்த கட்லெட்டை. மதியம் சாதம் மிஞ்சிவிட்டதா? உடனே கட்லெட்டா கன்வெர்ட் பண்ணிடுங்க. இதோ ரெசிபி!

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

சீஸ் க்யூப்கள், மெசரல்லா சீஸ், சந்தேர் சீஸ் என எந்த சீஸ் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். நன்றாக இருக்கும். சில நேரங்களில் டின்னருக்கு கூட இதை நீங்கள் சாப்பிட்டுக்கொள்ளலாம். ஒரு லைட் டின்னர் சாப்பிட்ட உணர்வை தரக்கூடியதுதான். ஏனெனில் அதில் நாம் தேவையான அளவு அரிசி சேர்கிறோமல்லவா?

இதை மாலை சிற்றுண்டியாக்கி தேநீர், காஃபியுடனும் பரிமாறலாம். ‘

தேவையான பொருட்கள்

வேகவைத்த அரிசி / சாதம் - 1 கப்

பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1

வேகவைத்து மசித்த கார்ன் - அரை கப்

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

ரவை - 2 ஸ்பூன்

மிளகாய் பொடி - அரை ஸ்பூன்

மல்லிப்பொடி - அரை ஸ்பூன்

மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன் இல்லாவிட்டால் ஏதேனும் ஒரு ரீபைண்ட் எண்ணெய் கூட வாங்கிக்கொள்ளலாம்.

உப்பு தேவையான அளவு

கேரட் துருவல், கேப்சிகம் பொடியாக நறுக்கியது விருப்பப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

அடுப்பில் ஒரு பேனை வைத்து அதில் எண்ணெய்விட்டு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.

அடுத்ததாக வேகவைத்து மசித்த கார்ன், நறுக்கிய காய்கறிகள், மிளகாய், மஞ்சள், மல்லித்தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

வேறு ஒரு பாத்திரத்தில் சாதத்தை நன்றாக மசித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் வதக்கி வைத்த காய்கறிகள், ரவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும்.

அதை எடுத்து கட்லெட் வடிவத்தில் நன்றாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதின் இடையில் ஒரு சீஸை சொருகிவிட வேண்டும்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

நன்றாக சமைத்த பின் உங்கள் கட்லெட்டை நீங்கள் ருசித்து பார்க்கலாம். அதனுடன் கெட்ச்அப், புதினா சட்னி அல்லது மையோனைஸ் சேர்த்து சாப்பிட்டு மகிழலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்