தினமும் கொய்யா இலைகளை டயட்டில் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 07, 2024
Hindustan Times Tamil
கொய்யா இலைகளில் பல்வேறு மருத்துவ பண்புகள் நிறைந்து இருப்பதால், பண்டைய காலத்தில் இருந்தே மருந்தாக பயன்படுத்தப்படுகிறது
கொய்யா இலைகளில் அடிப்படை வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம் நிறைந்துள்ளன
இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலத்தை மிருதுவாக்குகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து விடுபடுவதுடன், செரிமான அமைப்பையும் செளகரியமாக உணர வைக்கிறது
கொய்யா இலைகளில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் நோய் மற்றும் தொற்று பாதிப்புக்கு எதிராக உடல் போராடும் தன்மையை தருகிறது
டயபிடிஸ் மற்றும் அதன் பாதிப்பு ஆபத்து இருப்பவர்களுக்கு குளுக்கோஸ் அளவை நிலையாக வைக்க உதவுகிறது. சாப்பிட்ட பின் ரத்த சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது
கெட்ட கொல்ஸ்ட்ரால் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க உதவுகிறது கொய்யா இலைகள். இதன் மூலம் இதய நோய் ஆபத்து குறைகிறது
இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆபத்தை விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் எதிராக செயல்பட்டு செல்கள் பாதிப்பு அடைவதை தடுக்கிறது. இதனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது
குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!