கேரட் ஃபிர்னி; வயிறு முட்ட சாப்பிட்ட பின் ஒரு ஆரோக்கியமான டெசர்ட்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கேரட் ஃபிர்னி; வயிறு முட்ட சாப்பிட்ட பின் ஒரு ஆரோக்கியமான டெசர்ட்! இதோ ரெசிபி!

கேரட் ஃபிர்னி; வயிறு முட்ட சாப்பிட்ட பின் ஒரு ஆரோக்கியமான டெசர்ட்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Nov 22, 2024 04:54 PM IST

கேரட் ஃபிர்னி செய்வது எப்படி?

கேரட் ஃபிர்னி; வயிறு முட்ட சாப்பிட்ட பின் ஒரு ஆரோக்கியமான டெசர்ட்! இதோ ரெசிபி!
கேரட் ஃபிர்னி; வயிறு முட்ட சாப்பிட்ட பின் ஒரு ஆரோக்கியமான டெசர்ட்! இதோ ரெசிபி!

ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் வருகையால் நாம் இன்று அதிக கேரட்களை சாப்பிடுவதில்லை. ஆனால் எண்ணற்ற நற்குணங்கள் நிறைந்த கேரட்களை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதிகம் பச்சையாக சாப்பிடப்படும் உணவுகளுள் கேரட்டும் ஒன்று. எனவே நாம் இதை அப்படியே சாப்பிடலாம். கேரட்டில் எத்தனை ஆரோக்கிய நற்குணங்கள் நிறைந்துள்ளது பாருங்கள். கேரட்டின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேரட், கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. மாலை கண் நோயை அடிதது விரட்டுகிறது. கேரட்டில் உள்ள அதன் அடர் ஆரஞ்சு, சிவப்ப நிறம் அதில் உள்ள பீட்டா கரோடின்களை குறிக்கிறது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டைப் பயன்படுத்திதான் உடல் வைட்டமின் ஏஆக மாற்றுகிறது. கண் பார்வை ஆரோக்கியத்தை பராமரிக்க கேரட் உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. செரிமானத்தை தூண்டுகிறது. உடல் எடை குறைய உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள கொழுப்பு அளவைக் குறைக்கிறது. புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. பல்வேறு வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சிகளையும் கேரட் தடுக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. உங்கள் மூளையின் திறனை அதிகரிக்கிறது. கேரட்டில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மூளை ஆரோக்கியத்துக்கு உகந்தது என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைப்போக்குகிறது.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – கால் கப்

ஜவ்வரிசி – கால் கப்

(இந்த இரண்டையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

நெய் – 2 ஸ்பூன்

முந்திரி பருப்பு – 15

உலர்ந்த திராட்சை – 10

(ஒரு தாளிப்பு கரண்டியில் நெய்யை சேர்த்து சூடாக்கி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்)

கேரட் – 1 (துருவியது)

(முந்திரி பருப்பு வறுத்து முடித்தவுடன், எஞ்சிய நெய்யில் இந்த கேரட் துருவலையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்)

பால் – ஒரு லிட்டர்

சர்க்கரை – ஒரு கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாலை சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் வதக்கிய கேரட்டை சேர்த்து வேக விடவேண்டும். அடுத்து ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதையும் கொதிக்கும் பாலில் சேர்க்கவேண்டும். அடுத்து ஊறவைத்திருக்கும் ஜவ்வரிசியையும் அப்படியே சேர்க்கவேண்டும்.

அடுப்பை மிதமான தீயிலே வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அரைத்த பாஸ்மதி அரிசி மற்றும் ஜவ்வரிசி ஆகியவை நன்றாக கலந்து வெந்துவரும். அடுத்து ஒரு கப் சர்க்கரையை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

அடுப்பை குறைவான தீயில் வைத்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அப்போதுதான் அரைத்த அரிசி நன்றாக வேகும். ஜவ்வரிசி வெந்தவுடன், வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை தூவி இறக்கினால், சூப்பர் சுவையான கேரட் ஃபிர்னி தயார். இதை விருந்துகளில் பரிமாறினால், உங்கள் விருந்தே சிறக்கும். விருந்தாளிகள் அனைவரும் பாராட்டுவார்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.