அதிகாலையில் மிதமான சூட்டில் தண்ணீர் பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
அதிகாலையில் மிதமான சூட்டில் தண்ணீர் பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
அதிகாலையில் எழுந்தவுடன் முதலில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் பானம் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுப்பதாக இருக்கவேண்டும். அதற்கு நீங்கள் மெனக்கெடவேண்டாம். இளஞ்சூடான தண்ணீரை பருகினாலே போதும். அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும். இளஞ்சூடான தண்ணீரில் இத்தனை நன்மைகள் கிடைக்கும் என்றால், அது உங்கள் உடலுக்கு சிறந்ததுதான். உங்கள் நாளை நீங்கள் இளஞ்சூடான தண்ணீர் பருகி துவங்குவது, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் சிறந்த வழிகளுள் ஒன்று. இது உங்களின் செரிமானத்தை தூண்டுகிறது. உங்கள் உடலை சுத்தம் செய்கிறது. உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. அதிகாலையில் இளஞ்சூடான தண்ணீர் பருகுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நேர்மறையான பாதிப்புகள் கிடைத்து, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
இளஞ்சூடான தண்ணீரை காலையில் பருகுவது உங்கள் செரிமான மண்டலத்தை தூண்டுகிறது. உங்களை அந்த நாளுக்கு தயாராக்குகிறது. இளஞ்சூடான தண்ணீர், உங்கள் உணவை சிறப்பாக உடைக்கிறது. சாதாரணத்தண்ணீரை விட இளஞ்சூடான தண்ணீர் அந்த வேலையை சிறப்பாகச் செய்கிறது. உங்கள் வயிறு நீங்கள் சாப்பிட்ட உணவை எளிதில் செரிக்கச் செய்கிறது. இதனால் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்ச உதவுகிறது. இந்தப்பழக்கம், உங்களுக்கு செரிமானக் கோளாறுகள் மறறும் வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுதலை கொடுக்கிறது.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது
சூடான தண்ணீர் உடலின் வெப்ப நிலையை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு வியர்வையை ஏற்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இரண்டும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. எனவே தினமும் காலையில் இளஞ்சூடான தண்ணீர் பருகுவதால், உங்கள் உடலுக்கு நல்ல கழிவுநீக்கத்தை தருகிறீர்கள். இதனால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் மொத்தமாக வெளியேற்றப்படுகின்றன. இரவு முழுவதும் குவிந்த அசுத்தங்கள் வெளியேறுகின்றன.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
ரத்த நாளங்களை சூடான தண்ணீர் விரிவடையச் செய்கிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சீரான ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. உடல் முழுவதும் அது சீராகப் பரவ உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடல் உறுப்புகள் நன்றாக இயங்கவும், ஒட்டுமொத்த ஆற்றல் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது.
மூக்கடைப்பை சரிசெய்கிறது
சூடான தண்ணீரில் இருந்து வெளியேற்றப்படும் ஆவி, உங்கள் மூக்கு மற்றும் சுவாச பாதைக்கு இதமளிக்கிறது. இது உங்களுக்கு மூக்கடைப்பால் ஏற்படும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்துகிறது. இது சளி மற்றும் அலர்ஜி காலங்களில் மிகவும் முக்கியம். எனவே சூடான தண்ணீரை பருகும்போது, அது உங்களின் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எனவே உங்களுக்கு சளியில் இருந்து நிவாரணம் கொடுக்கவும் இளஞ்சூடான தண்ணீர் உதவுகிறது.
தொண்டை கரகரப்பை சரிசெய்கிறது
இளஞ்சூடான தண்ணீர் தொண்டை கரகரப்பைப்போக்கும் இயற்கை நிவாரணியாகும். தண்ணீரில் உள்ள இளஞ்சூடு, உங்களுக்கு தொண்டை எரிச்சலைப்போக்குகிறது. இது சளி, இருமல் மற்றும் பருவகால தொற்றுகளால் ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்கும். தினமும் அதிகாலையில் இந்த தண்ணீரை பருகுவது உங்கள் தொண்டையில் உள்ள எரிச்சலைப்போக்கும். உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும்.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
இளஞ்சூடான தண்ணீரைப் பருகும்போது, அது உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உடலால் அதிக கலோரிகளை எரிக்க முடியும். இது உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் சூடான தண்ணீர் பருகும்போது, சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் குறையும். எனவே உடல் எடையை குறைக்க நீங்கள் விரும்பினால், அதற்கு நீங்கள் வயிறு நிறைந்த உணர்வு உங்களுக்கு இருக்கவேண்டும். இளஞ்சூடான தண்ணீர் பருகுவது அதைத்தரும் என்பதால், நீங்கள் அதிக உணவு உட்கொள்வதை அது தடுக்கும். நீங்கள் சாப்பிடுவதை எளிதாக்கும்.
சரும ஆரோக்கியம்
உங்கள் சரும ஆரோக்கியம் மேம்பட உங்கள் உடலுக்கு போதிய நீர்ச்சத்து அவசியம். அதற்கு சூடான தண்ணீர் மிகவும் முக்கியமானது. இளங்சூடான தண்ணீரை நீங்கள் பருக நினைத்தால், அது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். இது உங்கள் சருமத்தை தெளிவாக்கும், உங்களுக்கு இயற்கை பளபளப்பைத் தரும். இது சரும நெகிழ்தன்மையை பராமரிக்க உதவும். இது உங்களை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள உதவும். இது உங்கள் முகத்தில ஏற்படும் சுருக்கங்களைப்போக்கும் திறன்கொண்டது.
அமைதி மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கிறது
இளஞ்சூடான தண்ணீருக்கு உங்களை இதமாக்கும் தன்மை உண்டு. எனவே இது உங்கள் மத்திய நரம்பு மண்டலத்தில் அமைதியை ஏற்படுத்துகிறது. இது உங்கள் மனம் அமைதி பெற உதவுகிறது. இளஞ்சூடான தண்ணீரை பருகுவதால், காலையிலே உங்கள் மனதுக்கு அமைதி கிடைக்கிறது. எனவே உங்கள் நாளை நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் துவங்க முடிகிறது. அமைதியை ஏற்படுத்துகிறது. இந்த மனஅமைதி, உங்களுக்கு கார்டிசால் சுரக்கும் அளவைக் குறைக்கிறது. உங்கள் மனஅழுத்த ஹார்மோன்கள் தான் இந்த கார்டிசால்கள், எனவே இவற்றை முறையாக்கினாலே உங்கள் வாழ்க்கை சிறக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்