வெள்ளரிக்காயில் தோசை செய்ய முடியமா? இதோ உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரோக்கியமான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெள்ளரிக்காயில் தோசை செய்ய முடியமா? இதோ உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரோக்கியமான ரெசிபி!

வெள்ளரிக்காயில் தோசை செய்ய முடியமா? இதோ உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரோக்கியமான ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Oct 06, 2024 11:57 AM IST

வெள்ளரிக்காயில் தோசை செய்ய முடியமா? இதோ உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரோக்கியமான ரெசிபி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வெள்ளரிக்காயில் தோசை செய்ய முடியமா? இதோ உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரோக்கியமான ரெசிபி!
வெள்ளரிக்காயில் தோசை செய்ய முடியமா? இதோ உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரோக்கியமான ரெசிபி!

தேவையான பொருட்கள்

வெள்ளரி பிஞ்சு – இரண்டு கப் (நறுக்கியது)

தேங்காய் துருவல் – ஒரு கப்

பச்சை மிளகாய் – 2

சீரகம் – ஒரு ஸ்பூன்

உப்பு – சிறிதளவு

தோசை மாவு – ஒரு கப்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் வெள்ளரி பிஞ்சு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, உப்பு என சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதை இட்லி மாவில் கலந்துகொள்ளவேண்டும்.

சிறிது நேரம் மாவு செட்டானவுடன், அதை தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி எடுக்கவேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார் மற்றும் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.

வெள்ளரியில் உள்ள நன்மைகள்

வெள்ளரியுடன் தேன், சாமந்தி அல்லது லாவண்டர் பூக்களை அரைத்து அதை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெரும். வெள்ளரியை ஃபிரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து, அதை வெட்டி, கண்களில் வைத்தால் உடலை குளுமையாக்கும். முகத்துக்கு பொலிவுதரும். கண்களில் கருவளையங்களை குணமாக்கும். வெள்ளரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற உதவுகிறது.

இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஃபோலேட் மற்றும் சிங்க் ஆகியவை நோய் எதிர்க்க உதவுகிறது. வெள்ளரி சாப்பிடும்போது மன ஆரோக்கியம் அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின்களும், மினரல்களும் கற்றல், கவனம், நினைவாற்றல் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இது உங்கள் மன தைரியத்தை அதிகரித்து, மனஅழுத்தத்தை சமநிலைப்படுத்தி, நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கும். சவாலான நேரங்களில் இந்த வெள்ளரி சாப்பிட மனம் அமைதிபெறும்.

வெயிலால் ஏற்படும் வேனிற் கட்டிகளுக்கு வெள்ளரி மிகவும் சிறந்தது. இதை பேஸ்டாக்கி உங்கள் சருமத்தில் பூசினால், வேனிற்கட்டிகளை போக்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வெள்ளரி, கற்றாழை, தயிர் ஆகியவற்றை அரைத்து வேனிற்கட்டிகள் அல்லது வியர்குரு உள்ள இடத்தில் தடவவேண்டும்.

வெள்ளரியை பாலுடன் அரைத்தும் பூச பலன் கிட்டும். வெள்ளரி செரிமானம் மற்றும் வளர்சிதைக்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக கால்சியம் அதற்கு உதவுகிறது. வெள்ளரியில் உள்ள கால்சியச்சத்து செரிமானத்துக்கு மட்டுமல்ல, எலும்புகள் வலுப்பெறவும் உதவுகிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கும், அமைப்புக்கும் உதவுகிறது.

வெள்ளரியில் உள்ள வைட்டமின் பி1, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெள்ளரியில் உள்ள பொட்டாசியச்சத்துக்கள் தசை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றுகிறது. உடலை நீர்ச்சத்துடன் இருக்க வைக்கிறது. இயற்கை எலக்ட்ரோலைட் பானமாகும்.

வறட்சி, நோய் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காலங்களில் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளது. வெயிலால் ஏற்படும் மயக்கத்தை தடுக்கிறது. குறிப்பாக இன்றைய கடும் வெயிலுக்கு ஏற்படும் சன் ஸ்ரோக்கில் இருந்து விடுபட உதவுகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த வெள்ளரியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.