Cooking Tips : இந்த டிப்ஸ் பயன்படுத்தி சட்னி அரைச்சு பாருங்க! எக்ஸ்ட்ரா இட்லி, தோசைகள் சாப்பிடத் தூண்டும்!
Cooking Tips : இந்த டிப்ஸ் பயன்படுத்தி சட்னி அரைச்சு பாருங்க, எக்ஸ்ட்ரா இட்லி, தோசைகள் சாப்பிடத் தூண்டும். சூப்பர் சுவையில் அசத்தும்.
இந்தியாவில் சட்னிகள் பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. தக்காளி, கடலை, தேங்காய், வெங்காயம், மல்லி, புதினா என பல்வேறு வகைகளில் சட்னிகள் தயாரிக்கப்படுகின்றன. சட்னி என்ற வார்த்தை இந்தியில் இருந்து வந்தது. சட்னா என்றால் இந்தியில் பசிக்கு புசி என்பதாகும். சட்னி என்றால், ஃபிரஷ்ஷாக அரைக்கப்படும் சட்னி அல்லது ஊறுகாய் இரண்டையும் குறிக்கிறது. ஆனால் இந்தியாவில் ஃபிரஷ்ஷாக அரைக்கப்படும் சட்னிக்குத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் சட்னிகள் தொக்குகள் மற்றும் பச்சடிகளாக உள்ளன. இது சைட் டிஷ்களாக பரிமாறப்படுகிறது. இந்த சட்னிகள் இட்லி, இடியாப்பம், தோசை, பொங்கல், உப்புமா, ஊத்தப்பம், பெசரட்டு, சப்பாத்தி போன்ற டிஃபன்களுடன் பரிமாறப்படுகின்றன. வெங்காயம், தக்காளி, தேங்காயே முக்கிய உட்பொருட்களாக இருந்தபோதும், காய்கறிகள் மற்றும் காய்கறி தோல்களிலும் சட்னிகள் தயாரிக்கப்படுகிறது.
பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு இரு வேளையும் டிபஃன் ஐட்டங்களே பரிமாறப்படுவதால் அதற்கு ஒரு நாளை இரண்டு முதல் 4 வகை வரை சட்னிகள் அரைக்கப்படுகின்றன. அவற்றுக்கு தொட்டுக்கொள்ள சாம்பார், குருமாக்கள், கிரேவிகள், பொடிகள், தொக்குகள் என இருந்தபோதும் சட்னிக்கு நம்மிடம் தனி வரவேற்பு உள்ளது என்பது உண்மைதான். எப்போதும் ஒரே மாதிரி சட்னி அரைத்து போர் அடித்தால் அதற்கும் தற்போது தீர்வு உள்ளது. ஏனெனில் இணையத்தை திறந்தாலே எண்ணற்ற சட்னி ரெசிபிக்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த சட்னிகளை செய்வதற்கான அளவு மற்றும் பக்குவம்தான் சட்னிகளின் சுவையை அதிகரித்துக்கொடுக்கும். இட்லி முதல் வீட்டில் எந்த டிஃபன் செய்தாலும் சட்னிக்குதான் முதலிடம். மற்றவற்றுக்கு அடுத்த இடம்தான். சட்னிகளை செய்வதும் எளிது. அவற்றை வதக்கி அல்லது பச்சையாக அல்லது வேகவைத்து என பல்வேறு வகைகளில் செய்யப்பட்டாலும், பட்டுன்னு ரெடியாகும் ஒரு ஈசியான ரெசிபிதான் சட்னிகள். இந்த சட்னிகளை எப்படி அரைக்க வேண்டும். எவ்வளவு பொருள் சேர்க்கவேண்டும் என்ற பொதுவான பக்குவ வழிகளை தெரிந்துகொள்ளுங்கள். அதற்கான டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இஞ்சி – பூண்டு பேஸ்ட்
இஞ்சி-பூண்டு விழுது அரைக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். அதாவது இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் நீங்கள் இதைப்பயன்படுத்தி சமைக்கும் உணவுப்பொருட்கள் சுவையாக இருக்கும். எனவே நீங்கள் தனியாக வீட்டில் இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும்போது இதை பின்பற்றுங்கள்.
தேங்காய்ச் சட்னி
தேங்காய் சட்னி அரைக்கும்போது பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்காமல் 4 பல் சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கும்போது வித்யாசமான சுவைதரும். பூண்டை தவிர்த்துவிட்டு, கால் இன்ச் இஞ்சி சேர்த்தாலும் சுவை அள்ளும்.
காலையில் அரைத்த தேங்காய் சட்னி மிஞ்சிவிட்டதா, அதில் புளிக்காத தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்து எடுத்தால் மதிய உணவுக்கு சுவையான பச்சடி தயார். இதை மதிய சாப்பாடு, சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
தக்காளி
தக்காளி சட்னிதான் பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்த சட்னியாக இருக்கும். ஏனெனில் அதன் புளிப்பு சுவையும், மிளகாயின் காரத்தையும் சேர்த்தால் சூப்பாரன சுவை கிட்டும். எனவே தக்காளி, வெங்காயம் சட்னி செய்யும்போது சிறிது வெள்ளை அல்லது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் சட்னிக்கு கூடுதல் மணமும், சுவையும் கொடுக்கும்.
துவையல் அரைக்கும்போது, மிளகாய் சேர்ப்பதற்கு பதில், மிளகு சேர்த்து அரைத்தால் துவையலின் ருசி அபாரமாக இருக்கும். இது அனைத்து வகை துவையலுக்கும் பொருந்தும்.
மல்லி, புதினா சட்னி
அடுத்த சட்னிகளில் ஸ்பெஷல் சட்னி என்றால் அது கொத்தமல்லி, புதினா துவையல் அல்லது சட்னிதான். அவற்றை தயாரிக்கும்போது அதில் தண்ணீருக்குப் பதிலாக சிறிது தயிர் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
இந்த குறிப்புகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம். இவற்றை பயன்படுத்தி உங்கள் வீட்டு சட்னியின் ருசியை அதிகரியுங்கள். பொதுவாகவே தொட்டுக்கொள்ளும் சட்னி அல்லது சாம்பாரைப் பொருத்துதான் நாம் உட்கொள்ளும் உணவின் அளவும் இருக்கும். டிபஃன் என்றாலே நாம் விரைவில் எளிதாக செய்வது சட்னிதான். எனவே இந்த குறிப்புகளை பின்பற்றி உங்கள் வீட்டு சட்னிகளின் சுவையை அதிகரியுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்