தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Breast Cancer Vs Feeding : மார்பக புற்றுநோய் பாதித்த பெண்கள், தாய்ப்பால் புகட்டலாமா? – நிபுணர்கள் கூறுவது என்ன?

Breast Cancer vs Feeding : மார்பக புற்றுநோய் பாதித்த பெண்கள், தாய்ப்பால் புகட்டலாமா? – நிபுணர்கள் கூறுவது என்ன?

Priyadarshini R HT Tamil
Aug 10, 2023 01:00 PM IST

Breast Cancer vs Feeding : மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாய்ப்பால் புகட்டலாமா? அதன் பக்கவிளைவுகள் என்ன? தெரிந்துகொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தாய்ப்பால் புகட்டுவதும், கீமோதெரபியும் ஒரு பெண் ஒன்றாக செய்ய முடியாது. கீமோதெரபி எடுத்துக்கொள்ளும்போது, பெண்கள் தாய்ப்பால் நிறுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், மருந்துகள் குழந்தையிடம் சென்று, குழந்தையின் வளர்ச்சி தடைபடலாம். நோய் எதிர்ப்பு தன்மை குறையலாம். தொற்றுகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படும்.

கர்ப்பத்துடன் தொடர்புள்ள மார்பக புற்றுநோய், கர்ப்பத்தின்போது அல்லது கர்ப்பத்துக்கு ஓராண்டுக்குப்பின்னர் ஏற்படும். சிகிச்சை பாதுகாப்பில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குழந்தை பிறக்காமல் இருப்பது, நேரம், தெரபியின் நிலை, எனவே அறுவைசிகிச்சை நிபுணர்கள், ரேடியேசன் நிபுணர்கள் மற்றும் குழந்தைபேறு மருத்துவர் என மூன்று துறை மருத்துவர்களும் கலந்து பேசி எடுக்கவேண்டிய முடிவாகும்.

மார்பக புற்று நோயால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் 6,85,000 மரணங்கள் ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வெற்றிகரமான ஒரு கேன்சர் சிகிச்சைக்குப்பின்னர், மார்பக புற்றுநோய் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தொடர்ந்த தேவையான கவனம் செலுத்த வேண்டும். புற்றுநோயின்றி வாழும்போது நீங்கள் உங்கள் குடும்பத்தை விரிவாக்குவது குறித்து யோசிக்க முடியும்.

நீங்கள் சிகிச்சைகள் எதிலும் இல்லாவிட்டால், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும் தாய்ப்பால் கொடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கீமோதெரபி மற்றும் ஹார்மோன் தெரபியால் தாய்ப்பால் சுரப்பது தடைபடலாம். ஏதாவது ஒரு புற மார்பகத்தில் உங்களுக்கு அறுவைசிகிச்சை, கீமோதெரபி செய்யப்பட்டிருந்தால், அதில் தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும். கவலையே வேண்டாம். சிகிச்சை செய்யப்படாத மார்பில் இருந்து தாய்ப்பால் புகட்டிக்கொள்ளலாம். 

குறிப்பிட்ட கால அவகாசம் இல்லையென்றாலும், சிகிச்சைக்கு மூன்று மாதங்களுக்குப்பின் குழந்தைக்கு பால் புகட்டுவது பாதுகாப்பானதுதான்.

மார்பக புற்றுநோய் சிகிச்சைக்குப்பின், உங்கள் மருத்துவர் பால்புகட்ட அறிவுறுத்தியபின் நீங்கள் நேரடியாக பால் புகட்ட துவங்கலாம். ஆனால் தனியாக கொடுக்கப்படும் பால்பவுடர் மிக்ஸ்களை நீங்கள் மறுக்காமல் இதனுடன் சேர்த்துக்கொள்வது அவசியம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் உள்ள தாய்மார்கள், குழந்தைகளுக்கு புகட்ட பரிந்துரைக்கப்படும் பல்வேறு ஃபார்முலா பால் கொடுக்கலாம். இதனால் குழந்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உங்கள் மார்பங்களை சுத்தமாக பராமரியுங்கள், உங்கள் முளைக்காம்புகளை காய்ந்த துண்டால் துடைக்காதீர்கள்.

மார்பகங்கள் புற்றுநோய் சிகிச்சையால் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவையே தங்களை சரிசெய்துகொள்ளும். எனவே அதில் அசௌகர்யங்களை உணர்ந்தால், ஐஸ் பேக்குகளை உபயோகப்படுத்த வேண்டும்.

கையால் மார்பகங்களில் பாலை நன்றாக பீய்ச்சி எடுங்கள், அதன் மூலம் உங்களுக்கு நிறைய பால் சுரக்க வாய்ப்புள்ளது. ஏதேனும் மார்பகத்தில் போதிய பால் சுரக்கவில்லையென்றால் இவ்வாறு செய்வது நல்லது.

WhatsApp channel

டாபிக்ஸ்