Boy Baby Names : ‘சிங்கத்தின் இதயம்’ என்ற பொருள் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் வீரமகன்களுக்கு பொருந்தும்!-boy baby names names for boys that mean heart of a lion fits your heroes - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : ‘சிங்கத்தின் இதயம்’ என்ற பொருள் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் வீரமகன்களுக்கு பொருந்தும்!

Boy Baby Names : ‘சிங்கத்தின் இதயம்’ என்ற பொருள் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் வீரமகன்களுக்கு பொருந்தும்!

Priyadarshini R HT Tamil
Aug 18, 2024 01:13 PM IST

Boy Baby Names : ‘சிங்கத்தின் இதயம்’ என்ற பொருள் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீரமகன்களுக்கு பொருந்தும் இந்தப்பெயர்களை வைத்து அழகு பாருங்கள்.

Boy Baby Names : ‘சிங்கத்தின் இதயம்’ என்ற பொருள் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் வீரமகன்களுக்கு பொருந்தும்!
Boy Baby Names : ‘சிங்கத்தின் இதயம்’ என்ற பொருள் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்! உங்கள் வீரமகன்களுக்கு பொருந்தும்!

அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.

உங்கள் ஆண் குழந்தைகளுக்கு சிங்கத்தின் இரும்பு இதயம் கொண்ட வலுவானவன் என்ற பொருள் வரும் வகையில் பெயர்களை வைத்து உங்கள் வீரமகன்களுக்கு பொருத்தமான பெயர்களை வையுங்கள்.

தைரியம் என்ற அர்த்தம் கொண்ட ஆண் குழந்தைகளின பெயர்கள்

சிங்கம் ஒரு கம்பீரமான காட்டு விலங்கு. அது தைரியம், அச்சமின்மை, வீரம் என அனைத்தையும் குறிக்கும். உங்கள் ஆண் குழந்தைகளுக்கு இந்த தன்மைகளுடன் கூடிய பெயரை வைத்தால் அது அவர்களை மேலும் சிறப்படையச் செய்யும். சிங்கத்தின் வீரம் பொருந்திய ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அதை உங்கள் ஆண் குழந்தைகளுக்கு வைத்து மகிழலாம்.

லலித்

லலித் என்றால் சிங்கம் என்று பொருள். இது தைரியம் மற்றும் பலம் என்பதை குறிக்கிறது.

ஆர்யே

ஆர்யே, சிங்கக்கடவுள் என்ற பொருளில் வரும் பெயர். இது ஆற்றல் அல்லது சக்தி மற்றும் வலிமை என்ற அர்த்தத்தை கொடுக்கக்கூடிய பெயர்.

அஸ்லான்

அஸ்லான் என்பதன் பொருள் சிங்கம். தைரியம் மற்றும் பிரபலமானவர்கள், பிரபுக்கள் என்பதை குறிக்கும் பெயர்.

ஹைடெர்

ஹைடெர் என்றால் சிங்கம் என்று பொருள். போராளி என்பதை பிரதிபலிக்கிறது. வலிமையானவர் மற்றும் வீரம் நிறைந்தவர் என்பதை குறிக்கிறது.

அர்சாலன்

அர்சாலன் என்பது சிங்கம் அல்லது காட்டின் அரசன் என்ற பொருளைத்தருகிறது. இந்தப் பெயர் வீரம் மற்றும் சக்தியைக் கொடுக்கிறது.

ரஸ்லான்

ரஸ்லான் என்றால் சிங்கம் போன்றவர் என்ற பொருள். இது பலம் மற்றம் தைரியத்தை குறிக்கிறது. இந்தப்பெயரைக் கொண்ட ஆண் குழந்தைகள் வீரமிக்கவர்களாக இருப்பார்கள்.

மஹித்

மஹித் என்றால், சிங்கத்தின் குணம் மற்றும் மரியாதையை பிரதிபலிக்கும் பெயர். இது தலைமைப்பண்பு மற்றும் பிரபுக்களைப் போன்ற பிரபலமடைபவர்கள் என்ற பொருளைத் தருகிறது.

டில்லன்

டில்லன் என்றால் சிங்கத்தைப் போன்றவர் என்ற பொருளைத் தருகிறது. மீண்டெழுவது மற்றும் வீரம் நிறைந்தவர் என்பதை இந்தப் பெயர்கள் பிரதிபலிக்கிறது.

அபய்சிம்மா

அபய்சிம்மா என்றால் சிங்கத்தைப் போல் அச்சமற்றவன் என்று பொருள். இந்தப் பெயர் தைரியம் மற்றும் வீரத்தையும் குறிக்கிறது.

காசர்

காசர் என்றால் சிங்கம் என்று பொருள். இந்தப் பெயர் கர்ஜிக்கும் மிருகம், பலம் மற்றும் ஆற்றல் நிறைந்தவர் என்ற பொருளைத்தருகிறது.

இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.