Kamala Harris: ‘ஒவ்வொரு வாக்கையும் பெறுவேன்’: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த கமலா ஹாரிஸ்!
Kamala Harris: ஒவ்வொரு வாக்கையும் பெறுவேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக கமலா ஹாரிஸ் அறிவித்தார்.
Kamala Harris: வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவங்களில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இன்று (ஜூலை 27 சனிக்கிழமை) கையெழுத்திட்டார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட கையெழுத்திட்ட கமலா ஹாரிஸ்:
தற்போது அமெரிக்க அதிபர் வேட்பாளராக இருக்கும் கமலா ஹாரிஸ், ஒவ்வொரு ஓட்டையும் 'சம்பாதிக்க' கடுமையாக உழைப்பேன் என்று கூறியிருக்கிறார். வரவிருக்கும் தேர்தலில் மக்கள் சக்தியால் இயக்கப்படும் தனது பரப்புரையைத் தொடங்கயிருக்கிறார். இதன்மூலம் அமெரிக்காவின் பெரிய கட்சியான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஆகியிருக்கிறார், கமலா ஹாரிஸ்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸில் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று, அமெரிக்க ஜனாதிபதிக்கான எனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படிவங்களில் நான் கையெழுத்திட்டேன். ஒவ்வொரு ஓட்டையும் சம்பாதிக்க கடுமையாக உழைப்பேன்.
மக்கள் சக்தியால் இயக்கப்படும் எங்கள் பிரசாரம் நவம்பரில் வெற்றிபெறும்" என்று கமலா ஹாரிஸ் சமூக ஊடக தளமான எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸை ஆதரிக்கும் பராக் ஒபாமா:
பராக் ஒபாமா மற்றும் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா ஆகியோர் கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக வழிமொழிந்தனர். இதுதொடர்பாக ஜூலை 26ஆம் தேதி, பராக் ஒபாமா, ’’தானும் மிச்சேலும் தங்கள் நண்பர் கமலா ஹாரிஸை அழைத்து, அவர் அமெரிக்காவின் ஒரு அருமையான ஜனாதிபதியாக இருப்பார். அவருக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது என்று தெரிவித்தோம்" என்று கூறியிருக்கிறார்.
பராக் ஒபாமா தனது எக்ஸ் கணக்கில் இதுதொடர்பாக வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தேர்தலில் இருந்து விலகிய பின்னர், அடுத்த ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை பரிந்துரைத்திருந்தார்.
டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ், ஜோ பைடன் ஆகியோர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து ஆதரவு கோரினர்.
ஃபாக்ஸ் நியூஸின் அறிக்கைகளின்படி, டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மார்-ஏ-லாகோவில் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, மத்திய கிழக்கு விவகாரங்களில் தனது போட்டியாளர் கமலா ஹாரிஸ் 'மோசமானவர்' என்று டிரம்ப் கூறினார். தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே மூன்றாம் உலகப் போர் தவிர்க்கப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
நெதன்யாகுவுடனான டிரம்பின் சந்திப்புக்கு ஒரு நாள் முன்பு(ஜூலை 25), கமலா ஹாரிஸ், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். இருப்பினும், காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கண்டித்தது நெதன்யாகுவை வருத்தமடையச் செய்ததாக ஆக்சியோஸ் என்னும் அமெரிக்க இணையதளம் தெரிவித்துள்ளது.
காஸாவில் "மோசமான மனிதாபிமான நிலைமை" குறித்து கமலா ஹாரிஸ் குறிப்பிட்டது நெதன்யாகுவை எரிச்சலடையச் செய்தது என்று ஒரு அதிகாரி ஆக்ஸியோஸ் அமெரிக்க இணையதளத்திடம் கூறினார்.
யார் இந்த கமலா ஹாரிஸ்?:
கமலா ஹாரிஸ் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர். இவரது தாய்வழி தாத்தா பி.வி.கோபாலன் திருவாரூர் மாவட்டம், துளசேந்திரபுரத்தைப் பூர்வீகமாக கொண்ட முன்னாள் தூதரக அதிகாரி ஆவார்.
2020 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் பல பகுதிகளில் உள்ளூர்வாசிகள் கமலா ஹாரிஸின் வெற்றியை வாழ்த்தி சுவரொட்டிகளை ஒட்டினர். 2020 தேர்தலில் வெற்றி பெற உள்ளூர்வாசிகள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இதில் ஜோ பிடன் கமலா ஹாரிஸை தனது துணையாக தேர்ந்தெடுத்தார். முந்தைய தேர்தல்களில் அவர் பெற்ற வெற்றியையும் துளசேந்திரபுரம் கிராமம் கொண்டாடியது.
டாபிக்ஸ்