உடலுக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானதாக மெக்னீசியம் இருந்து வருகிறது. மெக்னீசியம் நிறைந்திருக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 17, 2024

Hindustan Times
Tamil

மெக்னீசியத்தில் அடிப்படையான 300 பயோ கெமிக்கல்கள் உள்ளன. தசை செயல்பாடு, நரம்புகளுக்கு சமிக்ஞை, ஆற்றல் உற்பத்திக்கு மெக்னீசியம் தாதுக்கள் முக்கியமானவையாக உள்ளது

உணவு டயட்டில் மெக்னீசியம் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மெக்னீசியம் சப்ளிமெண்ட்களை காட்டிலும்,  இயற்கையான முறையில் இதை சேர்ப்பதால் பல நன்மைகளை பெறலாம்

பசலை கீரை, கேலே போன்ற பச்சை இலை காய்கறிகள் மெக்னீசியத்தின் சிறந்த ஆதாரமாக திகழ்கிறது. இதை  ஸ்மூத்தி, சாலட், ப்ரையாக தயார் செய்து சாப்பிடலாம்

பாதாம், முந்திரி, பூசணி விதைகளில் மெக்னீசியம் அதிகம் நிறைந்துள்ளது. இதை ஸ்நாக்ஸ் ஆகவும், உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம்

பிரவுன் ரைஸ், பார்லி, குயினோ, ஓட்ஸ் போதிய அளவிலான மெக்னீசியத்தை கொண்டுள்ளது. பன்முகத்தன்மையாக இதை உணவில் சேர்க்கலாம்

கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், பருப்பு வகைகள், பட்டாணி, கொண்டக்கடலை போன்றவற்றி மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாகவே உள்ளது. இதை வைத்து சூப், சாலட் ஆக தயார் செய்து சாப்பிடலாம்

கொழுப்பு நிறைந்த சாலமன், மத்தி மீன்கள் மெக்னீசியத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் இருப்பதால் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது

வாழைப்பழத்தில் பொட்டசியம் மட்டுமில்லாமல் மெக்னீசியமும் அதிக அளவில் இருக்கின்றன. இதை அப்படியே அல்லது ஸ்மூத்தியாக டயட்டில் சேர்த்துக்கொள்ளளாம்

அவகோடா பழம் மெக்னீசியம் சத்துக்களின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இதை சாலட், ஸ்ப்ரட், ஸ்மூத்தியாக சாப்பிடலாம்

டார்க் சாக்லெட்டில் 70 சதவீதம் வரை கோக்கோ உள்ளது. அத்துடன் மெக்னீசியமும் நிறைந்துள்ளது. இருப்பினும் மிதமான அளவில் இதை சாப்பிடலாம்

கிவி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்