Girl Baby Names : உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்த பெயர்களை வையுங்கள்! வீட்டில் மங்களம் உண்டாகும்!-girl baby names give your baby girls these names auspiciousness at home - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Girl Baby Names : உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்த பெயர்களை வையுங்கள்! வீட்டில் மங்களம் உண்டாகும்!

Girl Baby Names : உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்த பெயர்களை வையுங்கள்! வீட்டில் மங்களம் உண்டாகும்!

Priyadarshini R HT Tamil
Aug 17, 2024 03:56 PM IST

Girl Baby Names : உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்த பெயர்களை வைத்துப்பாருங்கள், உங்கள் வீட்டில் மங்களம் உண்டாகும். உங்களுக்கு அது மகிழச்சியைக் கொண்டுவரும்.

Girl Baby Names : உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்த பெயர்களை வையுங்கள்! வீட்டில் மங்களம் உண்டாகும்!
Girl Baby Names : உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்த பெயர்களை வையுங்கள்! வீட்டில் மங்களம் உண்டாகும்!

உங்கள் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்

உங்கள் குழந்தைகளுக்கான பெயர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் மங்களகரமான மற்றும் ஆன்மீக குணம் கொண்டவர்கள் என்ற அர்த்தத்தில் வரும் பெயர்களை வைத்தால் உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் குடியேறும்.

இந்து பாரம்பரியத்தில், இந்து பெண் தெய்வங்களின் பெயர்களை அடிப்படையாகக்கொண்ட பெயர்களை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. உங்கள் பெண் குழந்தைகளுக்கு வைப்பதற்கு மங்களகரமான பெயர்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் குழந்தைகளுக்கு நேர்மறையான ஆசிர்வாதங்களைக் கொண்டு வருகிறது.

ஆமானி

ஆமானி என்றால், செல்வச் செழிப்பு மற்றும் வெற்றியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. லட்சுமி தேவையின் கருணை மற்றும் அதிகப்படியான ஆசிர்வாதத்தை இந்தப்பெயர் குறிக்கிறது. இது உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டம் மற்றும் நலனைக் கொண்டுவருவதை குறிக்கிறது.

அனுமோடனா

அனுமோடனா என்பது அழகிய பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர். அனுமோடனா என்றால், ஆசிர்வாதம் மற்றும் மகிழ்ச்சி என்று பொருள். இளம்பெண்களின் தனித்தன்மையான பண்புகளை இது குறிக்கிறது.

ஹீபா

ஹீபா என்றால் பரிசு அல்லது வெகுமானம் என்று பொருள். இது மதிப்புமிக்க மற்றும் வாழ்நாள் முழுவதும் வைத்து மகிழக்கூடிய பரிசு என்பதை குறிக்கிறது. இது மதிப்புமிக்கது மற்றும் அன்பானது என்பதை குறிக்கிறது.

ஆதர்ஷினி

ஆதர்ஷின் என்றால், சிறந்த மற்றும் சரியான என்று பொருள். இது ஒருவர் வாழ்வில் பின்பற்றக்கூடிய உயரிய நன்னெறிகளை குறிப்பிடுகிறது.

ஆத்யா

ஆத்யா என்றால் முதல் சக்தி அல்லது துவக்கம் என்று பொருள். இதற்கு தெய்வீக சத்தியின் முதல் வடிவம் அல்லது முதன்மையான ஆற்றல் என்று பொருள்.

அபிக்யா

அபிக்யா என்றால், பிரபலமானவர் என்று பொருள் அல்லது மிகவும் அரியப்படுபவர் என்று பொருள். இது அங்கீகாரம், ஒருவருக்கு கிடைக்கும் தனிச்சிறப்பு ஆகியவற்றை குறிக்கிறது.

ஆர்யாஹி

ஆர்யாஹி என்றால் மதிப்புமிக்க அல்லது உன்னதமான மனிதர் என்பது பொருள். இது கருணை, மரியாதை மற்றும் உயர்ந்த நன்னெறிகளைக் கொண்டவர்கள் என்பதை காட்டுகிறது.

ஆராவி

ஆராவி என்றால் அமைதியின் வடிவம் அல்லது ஜொலிஜொலிப்பு என்று பொருள். இது அமைதியையும், சாந்தியையும் குறிக்கிறது. அவர்களின் மென்மையான இருப்பு ஒரு கனிவான, ரம்மியமான சூழலை உருவாக்குகிறது என்று பொருள்.

ஆஷிதா

ஆஷிதா என்றால், பாதுகாப்பான அல்லது இருக்க இடம் கிடைத்த என்று பொருள். இது பாதுகாப்பு மற்றும் உற்றதுணை என்பதை குறிக்கும் பெயர் ஆகும்.

அக்ஷிதா

அக்ஷிதா என்றால், மாறாதவர், நித்தியமானவர் என்று பொருள். இது நிரந்தரமான என்ற பொருளைத் தருகிறது. மீண்டுஎழக்கூடிய திறன் பெற்றவர் என்பதையும் குறிப்பிடுகிறது. ஒருவர் எவ்வித அச்சமுமின்றி நிமிர்ந்து நிற்கும் நிலையைக் குறிக்கிறது.

சாருல்

சாருல், அழகு அல்லது கருணை என்று பொருள், லட்சுமி தேவியின் அழகு மற்றும் மென்மையை குறப்பிடுகிறது.

இந்தப்பெயர்களை உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற ஒவ்வொரு அர்த்தங்கள், எழுத்துக்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.