Boy Baby Names : சதுர்த்தியன்று உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்கு விநாயகரின் பெயர்களை தேர்வு செய்யுங்கள்!-boy baby names choose ganesha names for your beautiful baby boys on chaturthi - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : சதுர்த்தியன்று உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்கு விநாயகரின் பெயர்களை தேர்வு செய்யுங்கள்!

Boy Baby Names : சதுர்த்தியன்று உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்கு விநாயகரின் பெயர்களை தேர்வு செய்யுங்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 07, 2024 03:35 PM IST

Boy Baby Names : சதுர்த்தியன்று உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்கு விநாயகரின் பெயர்களை தேர்வு செய்யுங்கள், அது அவர்களுக்கு விநாயகரின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுங்கள்.

Boy Baby Names : சதுர்த்தியன்று உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்கு விநாயகரின் பெயர்களை தேர்வு செய்யுங்கள்!
Boy Baby Names : சதுர்த்தியன்று உங்கள் அழகிய ஆண் குழந்தைகளுக்கு விநாயகரின் பெயர்களை தேர்வு செய்யுங்கள்!

அவாநீஷ்

அவா நீஷ் என்றால் அது கடவுளின் சக்தி மற்றும் பாதுகாப்பு என்று பொருள். அனைத்து உயிரினங்களையும் ஆளும் சக்தி கொண்டவர் என்று பொருள்.

இஷான்

இஷான் என்றால், தெய்வீக தொடர்புடைய என்று பொருள். விநாயகருக்கும், அவரது தந்தை சிவனுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இது குறிக்கிறது. இது பெற்றோருக்கும், குழந்தைக்கும் உள்ள புனிதமான பந்தத்தை மேலும் ஆழமாக்கும்.

காவீஷ்

காவீஷ் என்றால், ஞானம், கிரியேட்டிவான மற்றும் காவீஷ் என்றால், கவித்துமான என்று பொருள். உங்கள் குழந்தை சிறப்பான சிந்தனையாளராக வேண்டுமென்றாலும், நல்ல கலைத்திறன் கொண்டவராகவும் இருக்கவேண்டுமென்றால் இந்தப் பெயரை அவருக்கு சூட்டுங்கள்.

ருத்ரப்ரியா

ருத்ராப்ரியா என்றால் விநாயகருக்கும், இறைவன் சிவனுக்கும் இடையே உள்ள ஆழ்ந்தப்பற்றை குறிக்கும் பெயர். ருத்ரா என்பது சிவனின் பெயர். ப்ரியன் என்றால் அவர் மீது பிரியமானவர் என்று பொருள். இது ஆழ்ந்த அன்பு மற்றும் பாதுகாப்பை குறிக்கிறது. இந்த பெயர் இதமானது மற்றும் தெய்வீகத்தன்மை கொண்டது.

தருண்

தருண் என்றால் இளமை என்று பொருள். இந்தப்பெயரும் விநாயகரிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். இந்தப்பெயருக்கு, கடவுளின் இயற்கையான நித்தியமான அன்பு என்பதைக் குறிக்கிறது.

விநாயக்

விநாயக் என்றால் விநாயகரின் பெயர்களுள் ஒன்று. இது மிகவும் பிரபலமான பெயர். இந்தப்பெயர் முதன்மை தலைவர் என்பதை குறிக்கிறது. இதற்கு தனது பக்தர்களுக்கு ஏற்படும் தடையை அகற்றுபவர் என்று பொருள். விநாயகர் பக்தர்களின் தடைகளை அகற்றுவது போல் உங்கள் குழந்தைகள் உங்கள் வாழ்வில் உள்ள தடைகளை அகற்றுவார் என்று பொருள்.

விஸ்வா

விஸ்வா என்றால் விநாயகர் உலகம் முழுவதிலும் நிறைந்திருப்பவர் என்று பொருள். உலகத்துடன் கொண்ட தொடர்பு மற்றும் அது சார்நிதிருக்கும் அனைத்தும் என்பதை குறிக்கிறது.

கிரிதி

கிரிதி என்றால், கிரியேட்விட்டியை மதிப்பவர் என்று பொருள். கிரிதி என்றால், விநாயகரின் ஆசிர்வாதத்தைப் பெற்றவர் என்று பொருள். கலை, இசை மற்றும் வாழ்வின் அழகு, இசைவு என பலவற்றை குறிக்கிறது.

மனோமே

மனோமே என்றால், வாழ்க்கையை தொடுவதிலும், இதயங்களை வெல்வதிலும் விநாயகரின் திறன்களை பிரதிபலிக்கிறது. இனிமையான மனதுக்கு நெருக்கமான பெயர் என்பதை குறிக்கும். இது உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் நல்ல பெயர். அனைவருக்கு விருப்பமான என்று பொருள்.

நந்தனா

நந்தனா என்றால் இரு பாலருக்கும் வைக்கப்படும் ஒரு பெயர். இந்தப்பெயரும் விநாயகர் என்பதுடன் தொடர்புடைய பெயர். இந்தப்பெயர் கொண்ட உங்களின் குழந்தைகளுக்கு விநாயகரின் அருள் கிடைக்கும். விநாயகர் சிவனின் குழந்தை என்பதால், விநாயகரின் இந்தப் பெயர்கள் வைக்கப்படும் குழந்தைகளுக்கு அவரது தந்தை சிவன் மற்றும் தாய் பார்வதியின் அருளும் கிடைக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.