Morning Quotes : டீன் ஏஜ் குழந்தையின் தாயா? உங்களுக்கு உள்ள கூடுதல் பொறுப்புகள் என்ன பாருங்கள்!-morning quotes mother of a teenage child see what extra responsibilities you have - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes : டீன் ஏஜ் குழந்தையின் தாயா? உங்களுக்கு உள்ள கூடுதல் பொறுப்புகள் என்ன பாருங்கள்!

Morning Quotes : டீன் ஏஜ் குழந்தையின் தாயா? உங்களுக்கு உள்ள கூடுதல் பொறுப்புகள் என்ன பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 07, 2024 05:34 AM IST

Morning Quotes : டீன் ஏஜ் குழந்தையின் தாயா? உங்களுக்கு உள்ள கூடுதல் பொறுப்புகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Morning Quotes : டீன் ஏஜ் குழந்தையின் தாயா? உங்களுக்கு உள்ள கூடுதல் பொறுப்புகள் என்ன பாருங்கள்!
Morning Quotes : டீன் ஏஜ் குழந்தையின் தாயா? உங்களுக்கு உள்ள கூடுதல் பொறுப்புகள் என்ன பாருங்கள்!

அவர்களின் செயல்கள் அனைத்திலும் நேர்மையான ஆர்வத்தை காட்டுங்கள்

அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளில் நேர்மையான ஆர்வத்தை காட்டுங்கள். அவர்கள் விளையாட்டு, இசை என எதில் ஆர்வம் காட்டினாலும், அதில் அவர்களின் திறமைகளை பாராட்டுங்கள். அவர்களுக்கு பிடித்த விஷயங்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் உலகில் நீங்களும் ஒரு அங்கமாகுங்கள். இது அவர்களுடன் உங்களுக்கு ஆழ்ந்த தொடர்பை ஏற்படுத்த உதவும்.

அவருடன் திறந்த உரையாடல்

உங்கள் மகன்களுடன் திறந்த உரையாடலை நடத்துங்கள். நேர்மையான, திறந்த உரையாடல், அவர்களை கவனிக்க வேண்டும். விமர்சிக்கக் கூடாது. எனவே உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் ஒரு இடத்தை அவர்களுக்கு உருவாக்கிக்கொடுங்கள். அவர்கள் அவர்களின் சிந்தனைகளையும், உணர்வுகளையும் உங்களுடன் எளிதில் பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள் அல்லது அதற்கு ஏதுவான நபராக இருங்கள். அவர்கள் உங்களிடம் கூற விரும்புவதை தயக்கமின்றி கூறவேண்டும். வழக்கமான மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்கள் அவர்களுக்கும், உங்களுக்கும் இடையே புரிதலை ஏற்படுத்தி, நம்பிக்கையை வளர்க்க உதவும்.

தரமான நேரம்

நீங்கள் இருவரும் சேர்ந்து மகிழும் நடவடிக்கைகளுக்கு தனியாக நேரத்தை ஒதுக்குங்கள். அது படம் பார்ப்பது, சமையல், படிப்பு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பகிரப்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்தித்தரும். உங்களின் உறவை வலுப்படுத்த உதவும். அவர்களுக்கு நீங்கள்தான் முக்கியம் என்பதை காட்டும்.

அவர்களின் தனிமைக்கு மதிப்பு கொடுங்கள்

உங்கள் மகனுக்கு கொஞ்சம் தனிப்பட்ட நேரம் செலவிடவும், தனியிடமும் ஒதுக்குங்கள். சுதந்திரத்துக்கான அவர்களின் தேவைக்கு அவர்களுக்கு மரியாதை கொடுங்கள். நம்பிக்கை மற்றும் முதிர்ச்சிக்கு அதுதான் அவர்களுக்கு உதவும். அவர்களுடன் ஆரோக்கியமான மற்றும் சமமான உறவை பராமரிக்க உதவுங்கள்.

ஆதரவும், ஊக்கமும்

அவர்களின் மிகப்பெரிய உற்சாகமூட்டியாக இருங்கள். அவர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் ஊக்கத்தை வளர்த்தெடுங்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் நீங்களும் ஆர்வம் காட்டுங்கள். அதில் உங்களுக்கு தெரிந்தவற்றை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். அவர்களின் சாதனைகளை பாராட்டுங்கள். அவர்களின் சவாலான காலங்களில் அவர்களுக்கு உதவுங்கள். தேவைப்படும்போது வழிகாட்டுங்கள்.

நேர்மறையான ரோல் மாடல்

அவர்கள் பழகவேண்டிய பழக்க வழக்கங்கள் மற்றும் மதிப்புகளை நீங்கள் முதலில் பின்பற்றவேண்டும். நேர்மை, பொறுப்பு, அனுதாபம் ஆகிய குணங்கள் உங்கள் செயல்களில் வெளிப்படவேண்டும். அது அவர்களுக்கு வலுவான ஒரு எடுத்துக்காட்டாக அமையும். அது அவர்கள் பின்பற்ற வேண்டியவைகளாக நீங்கள் விரும்புவதை நிறைவேற்றும்.

அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்

அவர்களின் கருத்துக்கள் மற்றும் முடிவுகளுக்கு மதிப்பு கொடுங்கள். உங்களுக்கு அது பிடிக்கவில்லையென்றாலும், அவற்றுக்கு நீங்கள் மதிப்பு கொடுக்கவேண்டும். அவர்களின் கோணங்களுக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பது, பரஸ்பர மரியாதையை ஊக்குவிக்கும். மேலும் அவர்களின் தனித்தன்மையை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்பதையும் உணர்த்தும். இது அவர்களிடையே நேர்மையான உரையாடலுக்கு உதவும்.

தனிப்பட்ட கதைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்

உங்களின் டீன்ஏஜ் கதைகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களின் அனுபவங்கள் மற்றும் சவால்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். உங்களின் தனிப்பட்ட கதைகளை பகிர்வதன் மூலம், உங்களின் அனுபவங்களுடன் தொடர்புபடுத்துவதன் மூலம், உங்களை தன்னம்பிக்கை மிகுந்தவராக காட்டும். அது ஆழ்ந்த தொடர்பு மற்றும் புரிதலுக்கு வழிவகுக்கும்.

பரஸ்பர ஆர்வத்தை ஊக்குவித்தல்

நீங்கள் இருவரும் மகிழ்ந்திருக்கும் பரஸ்பர ஆர்வத்தை கண்டுபிடியுங்கள். அதை அவர்களிடம் வளர்த்தெடுங்கள். நடவடிக்கைகள், விளையாட்டுகள், சினிமாக்கள், புத்தகங்கள் என இருவரும் சேர்ந்து இதுபோன்ற விஷயங்களை பகிர்வதில் ஈடுபடுங்கள். இது உங்களிடையே வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். இது உங்களிடையே அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் தொடர்புகொள்ள வாய்ப்புக்களை வழங்கும்.

பொறுமை மற்றும் புரிதல்

பொறுமை மற்றும் புரிதலை வளரிளம் பருவத்தில் வளர்த்தெடுப்பது மிகவும் சிரமமான ஒன்றுதான். எனவே நீங்கள் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பதை தவிருங்கள். அனுதாபத்துடன் சூழல்களை அணுகுங்கள். அவர்களின் கோணத்தை புரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.