ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S Sep 03, 2024
Hindustan Times Tamil
ஞாபக சக்தியை அதிகரிக்க தண்டுக் கீரை, வல்லாரை கீரை, முருங்கைக் கீரை முதலியவற்றைச் சாப்பிடலாம்
முட்டைக்கோஸ், காலிபிளவர், கறிவேப்பிலை, அடர்ந்த பச்சை இலை காய்கறிகள் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த உதவும்
திராட்சை, ஆரஞ்சு, கொய்யா, தக்காளி, காரட், செர்ரி பழம், ஆப்பிள், வாழைப்பழம் முதலியவை மூளை சுறுசுறுப்பாக இருக்க சிறந்த உணவு வகைகளாகும்.
பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
பால், தயிர் போன்ற சத்துள்ள உணவு வகைகளால் அதிக அளவு ஆற்றல் கிடைக்கிறது. அதனால் சோம்பேறித்தனம் நீங்கிச் சுறுசுறுப்பு அதிகமாகிறது
அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகளுடன் இரும்புச் சத்து நிறைந்துள்ள பேரீச்சம் பழம், பட்டாணி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வதால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
தேனுடன் கலந்த வல்லாரை ஜூஸ் குடிப்பது மூளையை சிறப்பாக வைத்திருக்க உதவும்
குளிர்காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்