Marumagal Serial: அதிர்ச்சி கொடுக்கும் ஆதிரை தந்தை.. சிக்கி தவிக்கும் பிரபு - மருமகள் சீரியல்-marumagal serial today episode on august 6 2024 indicates prabhu was in fear - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: அதிர்ச்சி கொடுக்கும் ஆதிரை தந்தை.. சிக்கி தவிக்கும் பிரபு - மருமகள் சீரியல்

Marumagal Serial: அதிர்ச்சி கொடுக்கும் ஆதிரை தந்தை.. சிக்கி தவிக்கும் பிரபு - மருமகள் சீரியல்

Aarthi Balaji HT Tamil
Sep 06, 2024 09:53 AM IST

Marumagal Serial: தனது தந்தையை அழைத்து பிரபு, “ உங்க நட்பிற்காக நான் ஒவ்வொரு விஷயத்திலும் நஷ்டம் அடைய முடியாது. இப்போ நீங்க போய் எல்லாவற்றையும், சொல்லுங்க “ என திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.

Marumagal Serial: அதிர்ச்சி கொடுக்கும் ஆதிரை தந்தை.. சிக்கி தவிக்கும் பிரபு - மருமகள் சீரியல்
Marumagal Serial: அதிர்ச்சி கொடுக்கும் ஆதிரை தந்தை.. சிக்கி தவிக்கும் பிரபு - மருமகள் சீரியல்

திருமணத்தை நிறுத்த திட்டம்

முதலாவதாக திருமண பத்திரிக்கை செலவு தான் தொடங்கி இருக்கிறது. ஆதிரை வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு செலவு இழுத்து விடுவார்கள் என்ற பயத்தில் இருக்கிறார் பிரபு. ஆதிரை மற்றும் அவரது தந்தை மற்றும் சென்று திருமண பத்திரிக்கை பார்க்கலாம் என்று கிளம்புகிறார்கள். ஆனால் அவரின் தாய் தானும் சென்று எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற முனைப்பில் கிளம்புகிறார். ஆனால் இவர் வருகிறார் என சொன்னவுடன் ஏதோ திட்டம் போடுகிறார் என்று சிவபிரகாசம் கண்டு பிடித்துவிடுகிறார். இருப்பினும் எப்படியோ சமாளித்து அவர்களுடன் சென்றுவிடுகிறார்.

பத்திரிக்கை விலை பார்த்து அதிர்ச்சி

திருமண பத்திரிக்கை பார்க்க சென்ற இடத்தில் ஆதிரை எவ்வளவு தனக்கு செலவு வைப்பாள் என்று தெரியாமல், பிரபு குழப்பத்தில் இருக்கிறார். 50 ரூபாய் பத்திரிக்கை எடுத்து வைத்து கொண்டு பிரபு தனக்கு இது பிடித்து இருப்பதாக ஆதிரையிடம் சொல்கிறார். ஆனால் சிவபிரகாசம் இது சின்னதாக இருப்பதாக கூறி, 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இருக்கும் பத்திரிக்கை வாங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார்.

இந்நிலையில் மருமகள் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 6 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், திருமண பத்திரிக்கை கடைக்கு வேல்விழி வருகிறார்.

சபதம் எடுக்கும் வேல்விழு

” ஓ... நீயும் இங்க தான் இருக்கிறாயா? உன்னையும், வாட்டர் கேன் போடும் ஆதிரையையும் நான் பிரிக்காமா? விடமாட்டேன் “ என்று சொல்கிறார் வேல்விழி. மறுபக்கம் தனது தந்தையை அழைத்து பிரபு, “ உங்க நட்பிற்காக நான் ஒவ்வொரு விஷயத்திலும் நஷ்டம் அடைய முடியாது. இப்போ நீங்க போய் எல்லாவற்றையும், சொல்லுங்க “ என திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.

கல்யாணத்தை நிறுத்த முடியாது

இறுதியாக வழக்கம் போல் பிரபுவை பற்றி குறை சொல்லி திருமணத்தை நிறுத்த வேல்விழி முயல்கிறார். ஆனால் ஆதிரை, “ நீ எவ்வளவு தான் பிளான் பண்ணாலும், இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது.. கிளம்பு “ என முகத்தில் அடித்த படி சொல்லிவிட்டார். அத்துடன் இன்றைய ( ஆகஸ்ட் 6 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் என்ன நடக்கும் என்பதை முழுமையாக இரவு 8 மணிக்கு சன் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.