முகப்பரு வடுக்களை போக்க முக்கியமான வழிமுறைகள்! தோல் மருத்துவர் பரிந்துரை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முகப்பரு வடுக்களை போக்க முக்கியமான வழிமுறைகள்! தோல் மருத்துவர் பரிந்துரை!

முகப்பரு வடுக்களை போக்க முக்கியமான வழிமுறைகள்! தோல் மருத்துவர் பரிந்துரை!

Suguna Devi P HT Tamil
Nov 10, 2024 12:59 PM IST

உடல் மற்றும் முகத்தில் வரும் பருக்களும் அதனால் வரும் வடுக்களும் சருமத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றை குணப்படுத்துவதும் சற்று சிக்கலான விஷயமாகும். முகப்பருக்களை ஹைட்ரேட் ஆக வைத்திருப்பதன் மூலம் எளிமையாக தடுக்க முடியும்.

முகப்பரு வடுக்களை போக்க முக்கியமான வழிமுறைகள்! தோல் மருத்துவர் பரிந்துரை!
முகப்பரு வடுக்களை போக்க முக்கியமான வழிமுறைகள்! தோல் மருத்துவர் பரிந்துரை!

உடல் முகப்பரு வடுக்கள் தொல்லை தரக்கூடியதாக இருக்கலாம், முதுகில் வரும் பருக்களால் நீங்கள் விரும்பும் ஆடைகளை கூட அணிய முடியாதவாறு சூழ்நிலையை உருவாக்கும். ஏனெனில் முதுகில் இருக்கும் அந்த பருக்கள் வெளியே தெரிவதால் அசவுகர்ய உணர்வு ஏற்படும்.   உங்கள் சருமம் மற்றும் தினமும் அணிய வேண்டிய ஆடை ஆகியவற்றை நம்பிக்கையுடன் மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது, மேலும் இவை அனைத்தும் விடாமுயற்சியுடன் தோல் பராமரிப்பை பின்பற்றுவதன் மூலம் தொடங்குகிறது: முகப்பரு வந்த பின் குணப்படுத்துவதை விட வருமுன் தடுப்பது சிறந்தது. தோல் மருத்துவரான டாக்டர் டேவிட் கிம், இன்ஸ்டாகிராம் வீடியோவில் உடல் முகப்பரு வடுக்கள் பற்றிய பிரச்சினையை எடுத்துரைத்தார். முகப்பருக்கள் மேலும் ஏற்படுவதைத் தடுப்பதன் மூலம் உடல் முகப்பரு வடுக்கள் பிரச்சனையை ஒருவர் அணுக வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். தடுப்பு-மைய அணுகுமுறை என்பது பரு உருவாகும் அதன் வேர்களில் இருந்து சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

டாக்டர் கிம் சில பழக்க வழக்கத்தைப் பகிர்ந்து கொண்டார், இது உடலின் முகப்பரு வடுக்களின் ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு சிகிச்சையளிப்பதற்கான முழு பயணத்தையும் உள்ளடக்கியது - புதிய வெடிப்புகளைத் தடுப்பது முதல் இருக்கும் வடுக்களை ஒளிரச் செய்வது வரை. இந்த உடல் பராமரிப்பு வழக்கம் முகப்பரு வடு பிரச்சனையை அதன் ஆரம்ப நிலையிலேயே சமாளிக்கிறது.

 கழுவுதல்

முகப்பரு வளர்ச்சியைத் தடுக்க உதவுதற்கு முக்கியமான செயலாக உடலை சுத்தம் செய்வதை டாக்டர் கிம் பரிந்துரைத்தார். அவர் 10% பேன்ஆக்ஸில் (PanOxyl) இருக்க கூடிய  Benzoyl Peroxide பாடி வாஷ் பயன்படுத்த அறிவுறுத்தினார். 10% பென்சாயில் பெராக்சைடு எதிர்காலத்தில் ஏற்படும் வெடிப்புகளைத் தடுக்க உதவுவதால், முகப்பரு இல்லாதபோதும் இந்த வகை பாடி வாஷ் பயன்படுத்தப்படலாம் என்று எடுத்துரைத்தார்.

 சீரம்

சீரம் பொதுவாக முகத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இருப்பினும்  ​​உடலில் சீரம் பயன்படுத்தும் போது சருமத்தை திறம்பட நீரேற்றம் செய்து முகப்பரு வடுக்களுக்கு சிகிச்சை அளிக்கிறது. மேலும் இது குறித்து டாக்டர் கிம் கூறுகையில், "நியாசினமைடு, கோஜிக் அமிலம் மற்றும் அர்புடின் ஆகியவற்றைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை பிரகாசமாக்கவும், பிடிவாதமான முகப்பரு தழும்புகளை மென்மையாக்கவும் பயன்படுத்தவும் என பரிந்துரை செய்தார். குறிப்பாக இந்த பொருட்கள் முகப்பரு வடுக்களை ஒளிரச் செய்து மென்மையாக்குகின்றன. இதற்கு லா ரோச்-போசேயின் 10% நியாசினமைடு சீரம் பயன்படுத்துமாறு அவர் பரிந்துரைத்தார்.

உரித்தல் அமிலம்

தி ஆர்டினரிஸ் 7% கிளைகோலிக் ஆசிட் சீரம் அல்லது டோனரை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி சருமத்தை உரிக்குமாறு தோல் மருத்துவர் கிம் அறிவுறுத்தினார். இது தோல் அமைப்பை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை எரிச்சலூட்டுவதைத் தவிர்க்க வாரத்திற்கு ஒரு முறை இதைப் பயன்படுத்துங்கள், ஏனெனில் அதிகப்படியான பயன்பாடு வேறு விதமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

இந்த வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம், முகப்பரு வடுக்கள் ஒளிர்வது மட்டுமல்லாமல், வெடிப்புகள் குறைவாகவே இருக்கும். தெளிவான, ஆரோக்கியமான சருமத்தை நோக்கி இது ஒரு சிறந்த முடிவையே தரும் எனக் கூறுகிறார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.