Black Urad Cabbage Vadai : வீட்ல கருப்பு உளுந்தும், முட்டைகோசும் உள்ளதா? அப்ப இந்த ஸ்னாக்ஸ் செஞ்சு ருசிச்சு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Black Urad Cabbage Vadai : வீட்ல கருப்பு உளுந்தும், முட்டைகோசும் உள்ளதா? அப்ப இந்த ஸ்னாக்ஸ் செஞ்சு ருசிச்சு பாருங்க!

Black Urad Cabbage Vadai : வீட்ல கருப்பு உளுந்தும், முட்டைகோசும் உள்ளதா? அப்ப இந்த ஸ்னாக்ஸ் செஞ்சு ருசிச்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Sep 27, 2024 02:02 PM IST

Black Urad Cabbage Vadai : வீட்ல கருப்பு உளுந்தும், முட்டைகோசும் உள்ளதா? அப்ப இந்த ஸ்னாக்ஸ் செஞ்சு ருசிச்சு பாருங்க. ஒருமுறை ருசித்தால் விடவே மாட்டீர்கள்.

Black Urad Cabbage Vadai : வீட்ல கருப்பு உளுந்தும், முட்டைகோசும் உள்ளதா? அப்ப இந்த ஸ்னாக்ஸ் செஞ்சு ருசிச்சு பாருங்க!
Black Urad Cabbage Vadai : வீட்ல கருப்பு உளுந்தும், முட்டைகோசும் உள்ளதா? அப்ப இந்த ஸ்னாக்ஸ் செஞ்சு ருசிச்சு பாருங்க!

உளுந்தின் நன்மைகள்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உளுந்து உதவுகிறது

இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும், உங்களை மகிழ்ச்சியாகவும் வைக்கிறது.

நீரிழிவு நோயின் நண்பனாக உளுந்து உள்ளது.

தலைமுடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.

உளுந்து உடல் எடையை குறைக்கிறது.

உங்கள் எலும்பை உறுதியாக்குகிறது.

உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கிறது.

உங்கள் சருமத்துக்கு நல்லது.

ஆண் இனப்பெருக்க உறுப்புக்கு உதவுகிறது.

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட உளுந்தை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. எனவே உங்கள் வீட்டில் கருப்பு உளுந்தும், முட்டைகோசும் இருந்தால், நீங்கள் முட்டைகோஸ் வடையை எளிதாக செய்து முடித்துவிடலாம். இதை நீங்கள் மாலை நேரத்தில் சிற்றுண்டியாக உண்டு மகிழலாம்.

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – முக்கால் கப்

வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

முட்டைக்கோஸ் – 2 கப் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – கால் இன்ச்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிதளவு

(இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

எண்ணெய் – பொக்க தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

உளுந்தை இரண்டு மணி நேரம் தாராளமாக தண்ணீர்விட்டு, ஊறவைத்து நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவேண்டும். உளுந்தை நன்றாக மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அந்த உளுந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை என அனைத்தும் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.

கடாயில் தாராமாக எண்ணெய் சேர்த்து சூடாக்கிக்கொள்ளவேண்டும். மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் சேர்த்து பொன்னிறமானவுடன் பொரித்து எடுத்துவிடவேண்டும். அனைத்து மாவையும் இதுபோல் பொரித்து எடுத்தால் சூப்பர் சுவையில் உளுந்து முட்டைகோஸ் வடை தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, காரச்சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி, மல்லிச்சட்னி, புதினா சட்னி அல்லது சாம்பார் என எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். சூப்பர் சுவையில் அசத்தும். பள்ளிவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு செய்துகொடுப்பதற்கு ஒரு எளிய ஸ்னாக்ஸ். குழந்தைகள் மட்டுமின்றி வீட்டில் உள்ள பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இந்த ஸ்னாக்ஸ் இருக்கும்.

குறிப்பு

வடையை தட்டி எடுக்க சரியாக வரவில்லையென்றால், அதில் சிறிது பச்சரிசி மாவு கலந்துகொள்ளவேண்டும் அல்லது உளுந்துடனே சேர்த்து அரிசியையும் ஊறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்களுக்காக ஹெச்.டி. தமிழ் தினமும் எண்ணற்ற ரெசிபிக்களை தொகுத்து வழங்கி வருகிறது. இதுபோன்ற ரெசிபிக்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து எங்கள் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.