Malli Rice : மணக்க மணக்க மல்லித்தழை சாதம் சாப்பிடணுமா? இதோ ரெசிபி! லன்ச் பாக்ஸ் கவலையும் இனி இல்லை!
Malli Rice : மணக்க மணக்க மல்லித்தழை சாதம் சாப்பிட வேண்டுமெனில் இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இனி லன்ச் பாக்ஸ் கவலையும் இல்லை.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
அன்னாசி பூ – 1
பிரியாணி இலை – 1
பெரிய வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
கேரட் – 2 நறுக்கியது
பீன்ஸ் – ஒரு கப் (நறுக்கியது)
வேகவைத்த பச்சை பட்டாணி – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி – 15 (தேவைப்பட்டார் சேர்த்துக்கொள்ளவேண்டும்)
மசாலா விழுது அரைக்க தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலை – ஒரு கப்
புதினா இலை – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 5
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 4
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
செய்முறை
பாஸ்மதி அரிசியை கழுவி அரை மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், உப்பு மற்றும் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவைத்து, சாதம் வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
மிக்ஸியில் கொத்தமல்லி இலை, புதினா இலை, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவேண்டும்.
ஒரு கடாயில், நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் வதங்கியதும், கேரட், பீன்ஸ், வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வேகவைக்கவேண்டும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்த பின்னர், மசாலா விழுது சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறிது தண்ணீர் சேர்த்து மசாலா விழுதை பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவேண்டும். தண்ணீர் வற்றியதும், வேகவைத்த சாதத்தை சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.
கொத்தமல்லி சாதத்தை வறுத்த முந்திரி கொண்டு அலங்கரித்து, தயிர் பச்சடி, அப்பளம், ஏதேனும் ஒரு கிரேவியுடன் பரிமாற சுவை அள்ளும்.
கொத்தமல்லித்தழையில் உள்ள சத்துக்கள்
மல்லித்தழையில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளது. மேலும் நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துகள், கால்சியம், மாங்கனீஸ், வைட்டமின் கே மற்றம் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது. கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதில் உள்ள லினோலிக் அமிலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.
100 கிராம் மல்லித்தழையில், 31 கலோரிகள் உள்ளது. 2 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 146 மில்லி கிராம் கால்சியம், 5.3 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள், 4.7 கிராம் நார்ச்சத்துக்கள், 24 மில்லி கிராம் வைட்டமின் சி, 635 மில்லி கிராம் வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன.
மல்லித்தழையில் உள்ள நன்மைகள்
கண் பார்வையை கூராக்குகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சரும ஆரோக்கியத்தை உயர்த்துகிறது.
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
மூளையை பாதுகாக்கிறது.
தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது.
டாபிக்ஸ்