தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Honeymoon Spots: சின்ன பட்ஜெட்டில் சூப்பராக ஹனிமூன் போக தமிழ்நாட்டில் இத்தனை ஸ்பாட்கள் இருக்கு!

Honeymoon Spots: சின்ன பட்ஜெட்டில் சூப்பராக ஹனிமூன் போக தமிழ்நாட்டில் இத்தனை ஸ்பாட்கள் இருக்கு!

I Jayachandran HT Tamil
Jun 04, 2023 12:42 PM IST

சின்ன பட்ஜெட்டில் சூப்பராக ஹனிமூன் போக தமிழ்நாட்டில் உள்ள இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் சிறந்த தேனிலவு ஸ்பாட்கள்
தமிழ்நாட்டில் சிறந்த தேனிலவு ஸ்பாட்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

வால்பாறை

தென்னிந்தியாவின் சிராபுஞ்சி என அழைக்கப்படும் ஊர் வால்பாறை. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த வால்பாறை ஹனிமூன் செல்ல சிறந்த இடம் என்றே சொல்லலாம். ஆண்டுமுழுவதும் மழைப் பொழிவால் குளிர்ச்சி, நீங்காத பனிமூட்டம், ட்ரக்கிங், இயற்கை காட்சிகள் என இங்கு பார்த்து ரசிக்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கிறது. இயற்கையுடன் இருக்க ஆசைப்படுபவர்கள் நிச்சயம் வால்பாறை செல்லலாம்.

ஊட்டி

புதுமண தம்பதிகள் ஹனிமூன் என்றதும் முதலில் பிளான் போடும் இடம் ஊட்டி. மலைப்பிரதேசம், சுத்தமான காற்று காண்போர்களையும் நிச்சயம் கவரும். ஊட்டியில் நீர்வீழ்ச்சிகள், டீ எஸ்டேட், சாக்லேட் ஃபேக்ட்ரி, மலர் கண்காட்சி ஆகியவையும் பயங்கர ஃபேமஸ்.

கொடைக்கானல்

திண்டுகல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் ஹனிமூன் ஜோடிகளுக்கு சிறந்த சுற்றுலா தளமாகும். மலைகளின் இளவரசி, ஏரி, காடுகள், நீர் வீழ்ச்சி, ரிவர் ராஃப்டிங் என ஏகப்பட்ட இடங்களை சுற்றி பார்க்கலாம். பட்ஜெட்டில் முடியக் கூடியது.

மேகமலை

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை இயற்கையின் அதிசயம் என்றே சொல்லலாம். சுற்றி மரங்கள், பசுமை, நீர்வீழ்ச்சி என மினி கேரளா தான். சமீப காலமாக மேகமலைக்கு ஹனிமூன் ஜோடிகள் அதிகம் வருகை தருகின்றனர்.

குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர், ஹனிமூன் செல்பவர்களுக்கு மிகச் சிறந்த இடம். இங்கு இருக்கும் உதகை மண்டலம் ரயில் பயணம் மறக்க முடியாத அனுபவத்தை தரும். நிச்சயம் என்ஜாய் செய்யலாம்.

ஏலகிரி

வாணியம்பாடிக்கும் ஜோலார்ப்பேட்டைக்கும் இடையில் அமைந்துள்ளது ஏலகிரி. கடல் மட்டத்தில் இருந்து 1410 மீட்டர் உயரத்தில் இருப்பதால் குளுகுளுவென்ற வெப்பநிலை இருக்கும். இங்கு ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, புங்கனூர் ஏரி, அமிர்தி விலங்கியல் அருவி, ஏலகிரி சாகச முகாம் என ஜாலியாக பொழுதைப் போக்க நிறைய இடங்கள் இருக்கின்றன. அதிக செலவில்லாமல் சிறப்பாக தேனிலவை கழித்து வரலாம்,

ஏற்காடு

ஏற்காடு ஒரு சிறந்த மலை வாசஸ்தலமாகும். சேலம் ரயில் நிலையத்திலிரு்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 38 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சேலம் விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். இருப்பினும், 168 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சி விமான நிலையம், அருகிலுள்ள குறிப்பிடத்தக்க விமான நிலையமாகும். பேருந்து, டாக்ஸிகளில் செல்லலாம். ஏற்காடில் பகோடா பாயிண்ட், கிள்ளியூர் அருவி, கொட்டச்சேடு தேக்கு மரக்காடு, ரோஜா தோட்டம், பட்டு பண்ணை, மான் பூங்கா உள்பட பல்வேறு இடங்கள் உள்ளன. சிக்கனமான பட்ஜெட்டில் தங்கி வர ஏற்ற இடமாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்