Benefits of Sprouted Moong Bean : மூளை ஷார்ப்பாக, நோய் எதிர்ப்பாற்றல் பெருக, குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி போதும்!
Benefits of Sprouted Moong Bean : மூளை ஷார்ப்பாக, நோய் எதிர்ப்பாற்றல் பெருக, குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி போதும். முளைக்க வைத்த பாசிப்பயறில் உள்ள நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் ஒரு கைப்பிடியளவு ஊறவைத்து முளைக்கட்டிய பாசிப்பயிறை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது ஏன் என்று தெரியுமா? அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொண்டால், நீங்கள் உங்கள் உணவில் கட்டாயம் அதை சேர்த்துக்கொள்வீர்கள். உங்கள் அன்றாட உணவில் பாசிப்பயறு கட்டாயம் இடம் பிடிக்கவேண்டும். அதை ஊறவைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது நல்லது. ஊறவைத்து, முளைக்கட்டிய பாசிப்பயிறை நீங்கள் தினமும் காலையில் காலை உணவாக சாப்பிட்டால் அது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்கும். ஏனெனில் அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. உங்கள் நாள் முழுமைக்கும் தேவையான ஆற்றலை அது தரும். உங்களின் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கும். நீங்கள் தினமும் காலையில் ஊறுவைத்து முளைக்கட்டிய பாசிப்பயறு சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
புரதச்சத்துக்கள் நிறைந்தது
ஊறவைத்த பாசிப்பயறில் எண்ணற்ற தாவர புரதச்சத்துக்கள் உள்ளது. இது சைவப்பிரியர்களுக்கு தேவையான புரதச்சத்துக்களை வழங்கும். இதில் உள்ள புரதச்சத்துக்கள் உங்கள் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் திசுக்களை சரிசெய்கிறது. இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும் முறையாகப் பராமரிக்கிறது. காலையில் புரதச்சத்துக்கள் நிறைந்த ஒரு காலை உணவு உங்களுக்கு நீண்ட நேரம் ஒரு திருப்தியான சாப்பாடு சாப்பிட்ட உணர்வைத்தரும்.
ஆற்றல் அளவை அதிகரிக்கிறது
பாசிப்பயிறில் பி வைட்டமின்கள், இரும்புச்சத்துக்கள், மெக்னீசியச்சத்துக்கள் ஆகியவை உள்ளன. ஊறவைத்த பாசிப்பயறு, உங்கள் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை அள்ளி வழங்குகிறது. மேலும் இது காலை உணவுக்கு மிகவும் ஏற்றது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் ஆக்ஸ்ஜன் அளவை அதிகரிக்கின்றன. உங்களின் சோர்வைப் போக்குகிறது. உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் அளவையும் அதிகரிக்கிறது.