Herbal Remedies: கண் பிரச்னைகளுக்கு அருமருந்தான நேத்திரப் பூண்டின் மருத்துவப் பயன்கள்
கண் பிரச்னைகளுக்கு அருமருந்தான நேத்திரப் பூண்டின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கண் பிரச்னைகளுக்கு அருமருந்தான நேத்திரப் பூண்டின் மருத்துவப் பயன்கள்
மூலிகைகளில் அபூர்வமானது இந்த நேத்திரப் பூண்டு. எல்லா இடங்களிலும் இது வளராது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நேத்திரப் பூண்டு இலையாகவும், தைலமாகவும் விற்கப்படுகிறது.
நேத்திரப் பூண்டு நான்கு நான்கு இலைகளாக இருக்கும். மழை வளம், தண்ணீர் வளத்தை பொருத்து இது நன்கு உயரமாக வளரும்.சென்னைக்கு அருகே திருக்கழுக்குன்றத்தில் தேற்றான் மரங்களுக்கு நடுவில் பெரிய பெரிய இலைகளைக் கொண்டு வளர்வதை பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதை ‘அற்றலை பொருத்தி’ என்று பேச்சு வழக்கில் கூறுகின்றனர்.
நேத்திர பூண்டு, சோம நேத்ர புஷ்ப குழி, நேத்ர மூலி, நேத்திரஞ்சிமிட்டி மற்றும் ஒட்டி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.