Benefits of Muringa Leaves : முருங்கை கீரை உங்களின் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுமா? ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?-benefits of muringa leaves can moringa leaves help control your diabetes what does the research say - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Muringa Leaves : முருங்கை கீரை உங்களின் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுமா? ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

Benefits of Muringa Leaves : முருங்கை கீரை உங்களின் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுமா? ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

Priyadarshini R HT Tamil
Mar 26, 2024 09:11 PM IST

Benefits of Muringa Leaves : முருங்கை கீரை சில மருந்துகளுடன் வினைபுரியும். நீரிழிவு மருந்துகளுடன் வினைபுரிந்து ரத்தத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும். கல்லீரல் பிரச்னைகளுக்கு மாத்திரைகள் உட்கொள்பவர்களும் முருங்கைக்கீரையை எடுத்துக்கொள்ளக் கூடாது.

Benefits of Muringa Leaves : முருங்கை கீரை உங்களின் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுமா? ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?
Benefits of Muringa Leaves : முருங்கை கீரை உங்களின் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுமா? ஆராய்ச்சிகள் சொல்வது என்ன? (subbs kitchen )

இதை எதிர்த்து போராடுவது கடினமான ஒன்று. நீரிழிவு நோயை எதிர்த்து போராட நீங்கள் ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும். கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கான உணவாக முருங்கை உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது முருங்கை. இதன் விதைகள், இலைகள் மற்றும் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் இது தோன்றினாலும், உலகம் முழுவதும் இது பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளது.

முருங்கை கீரையின் நன்மைகள்

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துவதில், முருங்கைக் கீரை உதவும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. முருங்கைக் கீரை பொடி சாப்பிடுவதற்கு முன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறத.

இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது

இன்சுலின் சென்சிட்டிவிட்டி என்பது, உங்கள் செல்கள் இன்சுலினுக்கு எத்தனை பதில் கொடுக்கின்றன என்பதை பொருத்தது. முருங்கை இலை, இன்சுலின் எதிர்ப்பை தூண்டி, டெஸ்டிகுலர் இயங்குவதை அதிகரிக்கிறது.

கிளைசெமிக் ஏற்பு குறைவு

முருங்கை கீரையை சாப்பிடுவதால், அந்த உணவு ரத்தத்தில் சர்க்கரையை கலக்கும் அளவை குறைவாக்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதனால் சாப்பிட்ட பின், முருங்கைப் பொடியை சாப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் பயோஆக்டில் குணங்கள் அதற்கு உதவுகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

ஆக்ஸிடேடிவ் அழுத்தம் ஏற்படுவதாலும் உங்கள் உடலில் நீரிழிவு நோய் ஏற்படலாம். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவு நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது. அது ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயுடன் தொடர்புடைய வீக்கத்தையும் குறைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது எப்படி?

முருங்கைக்கீரையை பொடியாக்கி உட்கொள்ளலாம்.

முருங்கைக்கீரையில் தேநீர், சூப், வதக்கல், பொரியல், அடையில் சேர்த்து என எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

முருங்கை கீரையில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகளை சாப்பிடலாம்.

முருங்கை விதைகளை பசுமையாக சாப்பிடலாம். இதை வறுத்து பொடியாக்கி உணவில் கலந்து சாப்பிடலாம்.

யார் சாப்பிடக்கூடாது?

நீரிழிவு நோய்க்கு மருந்து, மாத்திரைகள் உட்கொள்பவர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு கோளாறு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அதிக அளவு முருங்கை கீரையை சாப்பிட்டாலும், அது இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

முருங்கை கீரை சில மருந்துகளுடன் வினைபுரியும். நீரிழிவு மருந்துகளுடன் வினைபுரிந்து ரத்தத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும். கல்லீரல் பிரச்னைகளுக்கு மாத்திரைகள் உட்கொள்பவர்களும் முருங்கைக்கீரையை எடுத்துக்கொள்ளக் கூடாது.

முருங்கைக்கீரை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் மருத்துவரின் அறிவுரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

முருங்கைக்கீரை கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும். எனவே கல்லீரல் பிரச்னைகள் உள்ளவர்கள் முருங்கை கீரையை உட்கொள்வதை குறைக்க வேண்டும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.