Ash Guard Dosai : வெள்ளைபூசணிக்காய் தோசை; வித்யாசமான காலை உணவு! நீர்ச்சத்து நிறைந்தது!
Ash Guard Dosai : வெள்ளைபூசணிக்காய் தோசை; வித்யாசமான காலை உணவு! நீர்ச்சத்து நிறைந்தது!
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – ஒரு கப்
பச்சரிசி – அரை கப்
உளுந்தம்பருப்பு – 1/3 கப்
சதுரமாக நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய் – ஒன்றரை கப்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் உளுந்தம்பருப்பை சேர்த்து நன்றாக கழுவிக் கொள்ளவேண்டும். பின்னர் அதை 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவேண்டும். பூசணிக்காயை தோல் சீவி விதைகளை நீக்கி நறுக்கிக் கொள்ளவேண்டும்.
இரண்டு மணி நேரம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு லேசாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின் நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
அரைத்த மாவை வேறொரு பாத்திரத்தில் மாற்றி மேலும் அரை கப் தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும். இந்த தோசைக்கு மாவை புளிக்க வைக்க வேண்டாம்.
தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி இளந்தோசைகளாக இடவேண்டும். தோசையைச் சுற்றி நல்லெண்ணெய் விட்டு வேகவிடவேண்டும். தோசையின் கீழ்புறம் பொன்னிறமாக மாறியவுடன், திருப்பிப் போட்டு, ஒரு நிமிடம் வேகவைத்து எடுக்கவேண்டும். சூடாக, தேங்காய்ச் சட்னியோடு பரிமாறினால், இந்தத் தோசை சுவைப்பதற்கு நீர் தோசை போல மென்மையாக இருக்கும்.
நன்றி - விருந்தோம்பல்
பூசணிக்காயின் நன்மைகள்
பூசணிக்காயில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. இதை உணவு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் எடைகுறைக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால் இதை தினமும் எடுப்பது இதய இயக்கத்தை அதிகரிக்கிறது. பூசணிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
உடலில் தண்ணீர்ச்சத்தை அதிகரிக்கச்செய்து நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. உடலில் தேவையான அளவு நீர்ச்சத்தை பராமரிக்கிறது. பூசணிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிறு வலி ஆகியவற்றை போக்குகிறது.
இதன் மலமிலக்கும் தன்மை குடல் இயக்கத்தை அதிகரித்து வயிற்றில் தோன்றும் அசௌகரியங்களை சரிசெய்கிறது. சுவாச மண்டலத்தில் உள்ள சளியை போக்குகிறது. இது நுரையீரல் இயங்க உதவுகிறது. அழற்சி மற்றும் மூச்சு திணறலை குறைக்கிறது.
பூசணிக்காயில் உள்ள வைட்டமின் இ சத்துக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சருமத்தை வெயில் பாதிப்புகள் மற்றும் தடிப்புகளில் இருந்து காக்கிறது. சரும தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
பூசணிக்காயில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தலைமுடிக்கு, ஊட்டமளிக்கிறது. இதன் ஜெல்லை தலைமுடியின் வேர்களில் தடவினால், அடர்த்தியாக முடிவளர உதவுகிறது. மேலும் தலையில் பேன், பொடுகை நீக்குகிறது.
100 கிராம் பூசணிக்காயில் 86.2 கலோரிகள் உள்ளன. இதில் 3.9 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. சாச்சுரேடட் கொழுப்பு 0.5 கிராம், கார்போஹைட்ரேட் 12.5 கிராம், நார்ச்சத்து 0.6 கிராம், புரதம் 2.0 கிராம், கொழுப்பு 0 மில்லிகிராம், சோடியம் 33.0 மில்லி கிராம், பொட்டாசியம் 359.1 மில்லி கிராம், வைட்டமின் ஏ 9.8 சதவீதம், வைட்டமின் பி6 11.3 சதவீதம், வைட்டமின் சி 30.5 சதவீதம், வைட்டமின் இ 1.1சதவீதம், கால்சியம் 5.1 சதவீதம், மெக்னீசியம் 6.7 சதவீதம், பாஸ்பரஸ் 5.0 சதவீதம், சிங்க் 7.2 சதவீதம், இரும்புச்சத்து 5.7 சதவீதம், மாங்கனீஸ் 12.5 சதவீதம், அயோடின் 5.9 சதவீதம் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்