Benefits of Dry Fig Water : உலர் அத்தியை ஊற வைத்த தண்ணீரை தினமும் காலையில் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Dry Fig Water : உலர் அத்தியை ஊற வைத்த தண்ணீரை தினமும் காலையில் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Benefits of Dry Fig Water : உலர் அத்தியை ஊற வைத்த தண்ணீரை தினமும் காலையில் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Sep 20, 2024 11:46 AM IST

Benefits of Dry Fig Water : உலர் அத்தியை ஊற வைத்த தண்ணீரை தினமும் காலையில் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Dry Fig Water : உலர் அத்தியை ஊற வைத்த தண்ணீரை தினமும் காலையில் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
Benefits of Dry Fig Water : உலர் அத்தியை ஊற வைத்த தண்ணீரை தினமும் காலையில் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

உலர் அத்திப்பழங்களில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்க தேவையானது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

அத்தியில் அதிகப்படியாக நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் குடல் இயக்கம் சீராக செயல்பட உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. அத்தியின் தண்ணீரை பருகுவது உங்கள் செரிமானத்தை தூண்டுகிறது. மேலும் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

அத்திப்பழத்தின் தண்ணீர் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் உங்களுக்கு சாப்பிட்ட உணர்வு வரும். இதனால் உங்களின் பசி கட்டுப்படுத்தப்படும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் பசியைக் குறைத்து, தேவையற்ற சாப்பிடும் எண்ணத்தை குறைக்கிறது. இதனால் நீங்கள் கலோரிகள் எடுத்துக்கொள்ளும் அளவு குறைகிறது. எனவே உடல் எடை குறைப்பு பயணத்தில் இருந்தீர்கள் என்றால் கட்டாயம் அத்தியைப் பயன்படுத்துங்கள்.

இதய ஆரோக்கியம்

அத்தியில் கெட்ட கொழுத்தை குறைக்க அதன் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உதவுகின்றன. எனவே. அதிகப்படியான நார்ச்சத்துக்களை நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டுமெனில் இந்த அத்தியை சாப்பிடலாம். அத்தியை ஊறவைத்த தண்ணீரை பருகுவது உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

அத்தியில் அதிகளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள் உள்ளது. இது எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும், அதன் சக்தியை அதிகரிக்கவும் சிறந்தது. எனவே தினமும் அத்தியை ஊறவைத்த தண்ணீரை பருகுவது எலும்புப்புரை நோய் மற்றும் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

அத்தியின் தண்ணீரை நீரிழிவு நோயாளிகள் பருகும்போது அது அவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்கும். ரத்ததை சுத்தப்படுத்தும்.

நோய் எதிர்ப்பாற்றல்

அத்தியில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் உடலில் ஏற்படும் ஃப்ரி ராடிக்கல்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. எனவே அத்தியை ஊறவைத்த தண்ணீர் நீங்கள் தொடர்ந்து பருகி வந்தால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். உங்களை தொற்றுகளில் இருந்து காக்கும்.

சரும ஆரோக்கியம்

அத்தியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சருமத்துக்கு ஆரோக்கியத்தை தருகிறது. முகப்பருக்களை குறைக்கிறது. உங்கள் சருமத்துக்கு இயற்கையான பொலிவைத் தருகிறது. எனவே அத்திப்பழத்தின் தண்ணீர் பருகுவதை நீங்கள் வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்கள் சருமத்தின் தன்மையை அதிகரிக்கும். உங்களுக்கு வயோதிகம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

அத்தியின் தண்ணீரை பருகுவது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அத்தியில் உள்ள இரும்புச்சத்துக்கள், உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவும். அத்தியை ஊறவைத்த தண்ணீரை நீங்கள் காலையில் பருகினால், அது அனுமியாவைத்தடுத்து, ஒட்டுமொத்த உடலுக்கும் ஆற்றலைத்தருகிறது.

உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது

அத்தில் உடலில் உள்ள கழிவுகளை நீக்கக்கூடிய உட்பொருட்கள் உள்ளது. அது உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. எனவே அத்திப்பழத்தின் தண்ணீரை நீங்கள் பருகும்போது, அது உங்கள் உடலை தினமும் சுத்தம் செய்கிறது. உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. உங்கள் உடலை நீர்ச்சத்துடன் பாதுகாக்கிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.