தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Drumstick : பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தரும்! முருங்கைகாயில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்க!

Benefits of Drumstick : பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தரும்! முருங்கைகாயில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்க!

Priyadarshini R HT Tamil
May 13, 2024 10:25 AM IST

Benefits of Drumstick : முருங்கை மரம் வைத்திருந்தால், 80 வயதிலும் தடி ஊன்றாமல் நடக்கலாம் என்பது பழமொழி. ஏனெனில் முருங்கைக்காயை அன்றாடம் உணவில் சேர்க்கும்போது அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.

Benefits of Drumstick : பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தரும்! முருங்கைகாயில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்க!
Benefits of Drumstick : பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தரும்! முருங்கைகாயில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

முருங்கை மரம் வைத்திருந்தால், 80 வயதிலும் தடி ஊன்றாமல் நடக்கலாம் என்பது பழமொழி. ஏனெனில் முருங்கைக்காயை அன்றாடம் உணவில் சேர்க்கும்போது அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.

முருங்கைக்காயை சாம்பாரில் சேர்த்துதான் சாப்பிட்டு பழக்கம். ஆனால் அதன் நன்மைகளை தெரிந்துகொண்டால், நீங்கள் அதை அனைத்து உணவிலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுவீர்கள். இப்போது முருங்கைக்காயை பொடி செய்து விற்கிறார்கள். நீங்கள் தினமும் எந்த சாம்பார் செய்தாலும் அதில் அந்தப்பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.

முருங்கைக்காய் சாம்பார் சுவையாக இருக்கும். அந்த சுவை உங்களுக்கு மற்ற சாம்பார்களிலும் கிடைக்கும். மேலும், அதன் நன்மைகளும் கிடைக்கும். முருங்கைகாயில் சூப் வைத்து சாப்பிடலாம் அல்லது ஊறுகாய் போட்டும் சாப்பிடலாம். அதில் வடை கூட செய்ய முடியும். வழக்கமான சாம்பார் அல்லது வறுவல், கிரேவி என்று இல்லாமல் இத்தனை முறைகளில் உங்கள் உணவில் முருங்கைக்காயை சேர்த்துக்கொள்ளலாம்.

முருங்கைக்காயின் நன்மைகள்

ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கிறது

நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி. நீங்கள் அதிக சர்க்கரையால் அவதிப்பட்டீர்கள் என்றால், உங்கள் உணவில் முருங்கைக்காய்களை கட்டாயம் சேர்க்கவேண்டும். பித்தப்பையின் இயக்கத்தை அதிகரிக்க முருங்கைக்காய் உதவுகிறது. இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது

முருங்கைக்காயில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், உங்கள் உடலில் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து உங்களைக் காக்கிறது.

எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது

முருங்கைக்காயில் கால்சியம், இரும்புச்சத்துக்கள் உள்ளது. இவை உங்களுக்கு வலுவான எலும்பை கொடுப்பதற்கு மிகவும் அவசியம். இதனால்தான் கர்ப்பிணிகளுக்கு முருங்கைக்காய் மிகவும் அவசியமான உணவாகக் கூறப்படுகிறது.

குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது

நார்ச்சத்து என்பது, முருங்கைக்காயில் உள்ள மற்றொரு முக்கியமான ஊட்டச்சத்தாகும். இது உங்கள் குடல் இயக்கத்தை சரியாக வைக்கிறது. இதைத்தவிர, இதில் உள்ள பி வைட்டமின்களான நியாசின், ரிபோஃப்ளாவின் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை உங்கள் உடலில் உள்ள வாயுப் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகின்றன.

ரத்தத்தை சுத்திகரிக்கிறது

முருங்கைக்காயில் உள்ள ஆன்டிபயோடிக்குகள், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது. இதனால் அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும்போது, அது ரத்தத்தின் தரத்தை அதிகரிக்கிறது.

சுவாச பிரச்னைகளுக்கு தீர்வு

கோவிட் காலங்களில், முருங்கைக்காய், சுவாசக்கோளாறுகளை சரிசெய்யும் ஒன்றாக நிரூபிக்கப்பட்டது. புதிய கொரோனா வைரஸ் என்பது, முதலில் சுவாச மண்டலத்தைதான் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது என்று கூறப்பட்டது. இதனால் தான் முருங்கைக்காயின் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், அதை எதிர்த்து போராட உதவியது.

பெண்களின் பாலியல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

பெண்களின் பாலியல் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது முருங்கைக்காய்கள், இதில் உள்ள சிங்க் சத்துக்கள், ஸ்பெர்மேட்டோஜெனிசிஸ் என்ற வேலையை மேம்படுத்த உதவுகிறது. இது பெண்களின் மலட்டுத்தன்மையை போக்க உதவுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்