Benefits of Butterfly Pea : ஊதா வண்ணத்தில் பூத்துக்குலுங்கும் சங்குப்பூக்கள் உடலுக்கு எத்தனை நன்மைகளை தருகிறது பாருங்க!
Benefits of Butterfly Pea : உங்கள் கண்களை சுண்டியிழுக்கும் ஊதா வண்ணத்தில் பூத்துக்குலுங்கும் சங்குப்பூக்கள் உங்கள் உடலுக்கு எத்தனை நன்மைகளை தருகிறது என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுதாகப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சங்குப்பூ அல்லது அபாரஜித்தா, ஆங்கிலத்தில் பட்டர்ஃபிளை பியா, இந்த பூவை வீடுகளில் அலங்காரத்திற்காக வளர்ப்பார்கள். இறைவனுக்கு பூஜை செய்ய உபயோகிப்பார்கள். இந்த பூவில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இதன் சுண்டியிழுக்கும் ஊதா வண்ணம் முழுவதும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது வீக்கம் மற்றும் அல்சரை குணப்படுத்துகிறது. சோர்வைப் போக்குவது என எண்ணற்ற குணங்கள் கொண்டது. இதில் உள்ள எண்ணற்ற நற்குணங்கள் உங்கள் உடலுக்கு தரும் மேலும் பல நன்மைகள் என்னவென்று தெரிந்துகொண்டு இந்தப் பூக்களைப் பயன்படுத்தி, உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுங்கள்.
ஆன்டிஆக்ஸிடன்ட்
சங்குப்பூக்களின் தேநீரை பருகுவது உங்கள் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொடுக்கிறது. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகள் மிகவும் தேவை. இது ஃப்ரி ராடிக்கல்களை விரட்டவும், இளம் வயதிலேயே வயோதிக தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது.
கிளைக்கேசன்களுக்கு எதிரான குணங்கள்
சங்குப்பூவில் ஆன்டி கிளைக்கேசன் குணங்கள் உள்ளது. கிளைக்கேசன் சேதம் என்பது சர்க்கரையால் புரதச்சத்துக்களுக்கு ஏற்படும் சேதம் மற்றும் சருமத்துக்கு வயோதிக தோற்றம் ஆகியவை ஆகும். ஆனால் சங்குபூ தேநீர் இளமையிலேயே ஏற்படும் வயோதிகத் தோற்றத்தை தடுக்கிறது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
சங்குப்பூ தேநீரில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. உங்களுக்கு வீக்கம் ஏற்பட்டால் நீங்கள் ஒரு கப் சங்குப்பூக்கள் தேநீரை பருகவேண்டும். அது உங்களுக்கு வீக்கம் மற்றும் வலிகளைக் குறைக்கும்.
சோர்வைத் தடுக்கிறது
சங்குப் பூ தேநீர் நாள்பட்ட நோயாலி பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. இது உடலில் ஏற்படும் நாள்பட்ட சோர்வைப்போக்குகிறது. உடலுக்கு தேவையான ஆற்றலைத்தருகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இது நாள்பட்ட சோர்வைப் போக்குகிறது.
வலிகளுக்கு நிவாரணம்
சங்குப்பூக்கள் வலிகளுக்கு நிவாரணம் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதன் அனல்ஜெஸிக் அதாவது வலிக்கு நிவாரணம் தரும் குணங்கள், உங்களுக்கு இந்த பூவில் தயாரிக்கப்படும் தேநீரை பருகும்போது தெரியும்.
நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள்
சங்குப்பூவில் நீங்கள் தேநீர் செய்து பருகும்போது, அது உங்கள் உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு கப் சங்குப்பூ டீயை இரு உணவுகளுக்கு இடையில் நாம் சுவைக்கும்போது, அது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை முறையாகப்பயன்படுத்த உதவுகிறது. இதனால் நீங்கள் தொடர்ந்து உணவுகள் எடுத்துக்கொண்டே செல்லும்போதும் சர்க்கரை அளவு முறையாகப்ப பராமரிக்கப்படுகிறது.
மனஅழுத்தம்
சங்குப்பூ மனஅழுத்தத்தை குறைக்கிறது. இது பழங்காலம் முதல் இப்போது வரை நன்மைகளைத் தருகிறது. நீங்கள் மனஅழுத்தத்தில் இருந்தால், பதற்றத்தோடு காணப்பட்டால், உறக்கம் வராமல் இருந்தால், சங்குப்பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை பருகுங்கள். சில நாட்களிலே உங்களுக்கு பலன் கிட்டும். இது உங்களின் மனதை அமைதியாக்கி, உங்களுக்கு அமைதியான இரவு உறக்கத்தை தரும். மூளையின் ஆற்றலை அதிகரிக்கும். நினைவாற்றலை உயர்த்தும்.
ஆஸ்துமாவுக்கு எதிரான குணங்கள்
சங்குப்பூவில் ஆஸ்துமாவுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இந்த பூவின் சாறை எடுத்து நீங்கள் பருகினால் அது உங்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்னைகளை சரிசெய்கிறது. நீங்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டால், இந்த டீயை பருகுவதை வழக்கமாகக்கொள்வது நல்லது.
சருமம் மற்றும் தலைமுடி
சங்குப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமம் மற்றும் தரைமுடிக்கு நல்லது. இந்த தேநீரில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இது உங்கள் சருமம் மற்றும் தலைமுடியில் வயோதிகம் ஏற்படுவதை தடுக்கிறது. இந்த தேநீரை நீங்கள் வெளிப்புறத்திலும் பயன்படுத்தலாம். தலைமுடி, முகம் என மாஸ்குகளுக்குப் பயன்படுத்தலாம்.
அல்சருக்கு எதிரான குணங்கள்
இந்த டீயில் உங்கள் வயிற்றை அமைதிப்படுத்தும் குணங்கள் உள்ளது. இது அல்சரைப் போக்குகிறது. இது அல்சரை பாரம்பரிய முறையில் குணப்படுத்துகிறது. இந்த டீயை தொடர்ந்து பருகினால் உங்களுக்கு அல்சர் கோளாறுகள் தவிர்க்கப்படும். அல்சலை குணப்படுத்த பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புடையை செய்திகள்