Bael Fruit Benefits: மிடில் கிளாஸ் ஆப்பிள் வில்வ பழத்தின் நன்மைகள்! மகத்தான மருத்துவ குணங்கள்!-medicinal benefits of bael fruit - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bael Fruit Benefits: மிடில் கிளாஸ் ஆப்பிள் வில்வ பழத்தின் நன்மைகள்! மகத்தான மருத்துவ குணங்கள்!

Bael Fruit Benefits: மிடில் கிளாஸ் ஆப்பிள் வில்வ பழத்தின் நன்மைகள்! மகத்தான மருத்துவ குணங்கள்!

Suguna Devi P HT Tamil
Sep 20, 2024 04:08 PM IST

Bael Fruit Benefits:வில்வ பழத்தில் இயற்கையாகவே பல நலன்கள் உள்ளன. இதன் மருத்துவ குணங்கள் பல நோய்களுக்கு நிவாராணியாக பயன்படுகிறது. இதனை மர ஆப்பிள் என்றும் ஒரு பெயர் வைத்து அழைப்பதுண்டு. உலகம் முழுவதும் இப்பழம் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

Bael Fruit Benefits: மிடில் கிளாஸ் ஆப்பிள் வில்வ பழத்தின் நன்மைகள்! மகத்தான மருத்துவ குணங்கள்!
Bael Fruit Benefits: மிடில் கிளாஸ் ஆப்பிள் வில்வ பழத்தின் நன்மைகள்! மகத்தான மருத்துவ குணங்கள்!

கிராமங்களில் வில்வ பழம் கடவுள் வழிபாட்டின் போது மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்த படுகின்றன. இருப்பினும் வில்வ பழத்தில் உள்ள மகத்தான நன்மைகள் பல மருத்துவ நிவாராணியாக உள்ளது. வில்வ பழத்தை தவிர அதிக இலையும் மருத்துவ குணம் உடையதாக உள்ளது.  இது குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இந்நிலையில் அதன் நன்மைகளை அறிந்து சாப்பிட்டு வந்தால் எளிமையாக பல பலன்களை பெற முடிகிறது.

வில்வ பழத்தின் பயன்கள் 

வில்வ பழத்தை தொடர்ந்து சாப்பிட, நாள்பட்ட வயிற்று வலியைக் குணப்படுத்தும். இதன் தளிரை வதக்கிச் சூடாக்கி குடித்து வந்தால் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் கொல்லப்பட்டு வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளையும் சரி செய்ய உதவும். வில்வ இலை, வில்வம் பழம் இரண்டும் குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதியை சரிப்படுத்தும்.

வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் ஒரு சிறந்த மருத்தாகும். சிறுநீர் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். தாய்ப்பாலை பெருக்கும். மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை சீராக்கும். வில்வப்பழத்தின் தசை பகுதியை வெல்லத்துடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வார மலச்சிக்கலைத் தடுக்கும். மேலும் இரும்புச்சத்து கூடும். 

வில்வ பழச் சாறு 

வில்வப்பழத்தில் இருந்து சாறு தயாரித்து குடிக்கும் போது, அதிக உடற்சூடு மற்றும் அது தொடர்பான நோய்கள் நீங்கும். நீண்ட நாட்களாக இருக்கும் பசியின்மை, எதை சாப்பிடும் போதும் ருசி இல்லாமல் இருக்கும் ருசியின்மை போன்ற தொலைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.வில்வப்பழத் தசையை, அரைமணிநேரம் நீரில் ஊறவைத்து, நன்கு பிசைந்து, அதன் சாற்றை குடித்து வரும் போது பெரும்பாலான வயிறு சம்பந்தபட்ட நோய்களை தீர்க்கும்.

வயிற்றில் இருக்கும் கிருமித்தொற்று சரியாகும். உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.மேலும் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும்.புற்று செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோய்களை எளிதாக குறைக்கும் திறன் வில்வ பழத்தில் உள்ளது. உடலின் மற்ற உள்ளுறுப்புகளின் புண்களைக் குணமாக்கும். மேலும் நரம்புகளை வலுவாக்கும்.கோடைக்காலங்களில் அதிக உடற்சூட்டைத் தணிக்க, மாதமிருமுறை, வில்வப்பழத் தசைகளைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.