தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beetroot Pachadi : ஓண சத்யவில் ஸ்பெஷல் மெனு! பீட்ரூட் பச்சடி செய்வது எப்படி?

Beetroot Pachadi : ஓண சத்யவில் ஸ்பெஷல் மெனு! பீட்ரூட் பச்சடி செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Aug 26, 2023 12:00 PM IST

Beetroot Pachadi : இது சுவை, மணம், நிறம் அனைத்தும் நிறைந்த ஒரு சைட் டிஷ். இதை நீங்கள் சாதம், சப்பாத்தி என மெயின் டிஷ்களுடன் சேர்த்து சாப்பிடலாம். வீட்டியேலே பீட்ரூட் பச்சடி செய்வது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பீட்ரூட் பச்சடி செய்வது எப்படி?
பீட்ரூட் பச்சடி செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஓணத்துக்கு பீட்டுரூட் பச்சடி செய்து உங்களின் அன்பானவர்களை உபசரிக்க வேண்டும் என்று விரும்பினால், இதோ ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பீட்ரூட் மற்றும் மூலிகைகளின் நன்மைகள் அடங்கியுள்ளன. மசாலக்கள், தயிர், பீட்ரூட் ஆகியவை சேர்த்து செய்யப்படுகிறது. 

இது சுவை, மணம், நிறம் அனைத்தும் நிறைந்த ஒரு சைட் டிஷ். இதை நீங்கள் சாதம், சப்பாத்தி என மெயின் டிஷ்களுடன் சேர்த்து சாப்பிடலாம். வீட்டியேலே பீட்ரூட் பச்சடி செய்வது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பீட்ரூட் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 1

தயிர் – 1 கப்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

எண்ணெய் – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

முதலில் பீட்ரூட்டை நன்றாக அலசிவிட்டு, தோல் சீவி துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

துருவிய பீட்ரூட்டை ஒரு பாத்திரத்தில் சேர்த்து வேக வைக்க வேண்டும். நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் குக்கரில் வைத்து வேண்டுமானாலும் வேக வைத்துக்கொள்ளலாம். அல்லது இட்லி பாத்திரம், ஸ்ட்மரில் கூட வேக வைத்துக்கொள்ளலாம். அதிகமாக வேகவைத்து விடாதீர்கள், பீட்ரூட் கரைந்துவிடும். வெந்து மிருதுவான பதத்தில்தான் இருக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஒரு சிட்டிகை பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து, கடுகு பொறிந்து வந்தவுடன், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பை அணைத்துவிட்டு, இந்த பொருட்கள் அனைத்தும் ஆறும் வரை காத்திருந்து, அவற்றையெல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்துகொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, அதனுடன் வேகவைத்த பீட்ரூட் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்துவிடவேண்டும்.

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலி எண்ணெயை சூடாக்கி சேர்த்து தாளித்து இந்த பச்சடியுடன் சேர்க்க வேண்டும்.

சுவையான் பீட்ரூட் பச்சடி தற்போது ருசிக்க தயராகிவிட்டது. இதை நீங்கள் சாதம் அல்லது சப்பாத்தி என இரண்டுக்கும் பரிமாறி சாப்பிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்