தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beans Parupu Usili : அள்ளும் சுவையில் கல்யாண விருந்து பீன்ஸ் பருப்பு உசிலி செய்வது எப்படி?

Beans Parupu Usili : அள்ளும் சுவையில் கல்யாண விருந்து பீன்ஸ் பருப்பு உசிலி செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Aug 10, 2023 12:00 PM IST

பீன்ஸ் பருப்பு உசிலியை, பீன்ஸ், அவரைக்காய், வாழைப்பூ, முடைக்கோஸ் என எந்த காய் வேண்டுமானாலும் சேர்த்து செய்துகொள்ளலாம்.

அள்ளும் சுவையில் பீன்ஸ் பருப்பு உசிலி செய்வது எப்படி?
அள்ளும் சுவையில் பீன்ஸ் பருப்பு உசிலி செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

இதை செய்ய குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். எனவே அவசரமாக செய்ய இந்த ரெசிபியை யோசிக்க வேண்டாம்.

பீன்ஸ் – (நல்ல பிரெஞ்ச் பீன்ஸை எடுத்து, நன்றாக நாரை சுத்தம் செய்து, கழுவி, நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்) அரை கப்

கடலை பருப்பு – கால் கப்

துவரம் பருப்பு – கால் கப்

வர மிளகாய் – 2 அல்லது 3

பச்சை மிளகாய் – 1

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

பெருங்காயம் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

இரண்டு பருப்பையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அலசி ஒரு மணி நேரம் ஊற வைத்துவிடவேண்டும்.

பச்சை மிளகாய், வர மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரைக்கும்போது சோம்பு சேர்த்து சிலர் அரைப்பார்கள். வேண்டுமெனில் கால் டீஸ்பூன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

நறுக்கி வைத்துள்ள பீன்ஸை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். மைக்ரோ வேவில் கூட 7-8 நிமிடம் வைத்து வேகவைத்துக்கொள்ளலாம்.

இதற்கிடையில், ஒரு இட்லி பாத்திரத்தில், அரைத்து வைத்த பருப்பு வகைகளை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சட்டியில் தண்ணீர் மற்றும் பச்சை வாசம் போகும் வரை வறுத்து எடுத்தும் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமானதை செய்யுங்கள்.

இவை ஆறியவுடன், கைகளால் நன்றாக பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். அல்லது மிக்ஸியில் போட்டு ஒரு அடிவிட்டால் நன்றாக தூளாகி வந்துவிடும். இதை நீங்கள் அதிகம் செய்து பீரிசரில் வைத்துக்கொள்ளலாம். பின்னர் தேவைப்படும்போது காய்கறிகளை வாங்கி செய்துகொள்ளலாம்.

இன்னொரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதில் உடைத்து எடுத்துக்கொண்டுள்ள பருப்பை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் அதில் வேகவைத்த பீன்ஸை சேர்க்க வேண்டும்.

இரண்டையும் நன்றாக ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கலந்துவிடவேண்டும்.

அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம்.

இப்போது பீன்ஸ் பருப்பு உசிலி சாப்பிட தயாராக உள்ளது.

இதை சாதத்துடன் பரிமாறலாம். சாப்பாத்திக்கும் நல்ல சைட் டிஷ் தான்.

மோர் குழம்பு, ரசம், கார குழம்பு, வத்தல் குழம்பு, புளிக்குழம்பு என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

WhatsApp channel

டாபிக்ஸ்