தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Banana Stem : சிறுநீரகத்துக்கு நல்லது! வாழைத்தண்டு சாம்பார்! இப்டி செஞ்சு பாருங்க!

Banana Stem : சிறுநீரகத்துக்கு நல்லது! வாழைத்தண்டு சாம்பார்! இப்டி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Aug 29, 2023 11:04 AM IST

Banana Stem : சிறுநீரகத்துக்கு நன்மை செய்யும் வாழைத்தண்டு சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வாழைத்தண்டு சாம்பார் செய்வது எப்படி?
வாழைத்தண்டு சாம்பார் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

வாழைத்தண்டு சிறுநீர்ப்பாதை மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க மிகச்சிறந்த இயற்கை உணவு. வாழைத்தண்டில் வைட்டமின் பி 6, பொட்டாசியம் மற்றும் டையூரிடிக் பண்புகள் உள்ளது. சிறுநீரக கற்களால வலிமிகுந்த உபாதையை அனுபவிப்பவர்கள் வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறகூடும். இதை அவ்வப்போது சேர்த்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

தேவவையான பொருட்கள்

வாழைத்தண்டு – 2 கப் (சுத்தம் செய்து, நறுக்கியது)

புளி – 1 எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

துவரம் பருப்பு – 1 கப்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

சாம்பார் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

வர கொத்தமல்லி – 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

மிளகு – கால் ஸ்பூன்

தேங்காய் – அரை கப் (துருவியது)

வெந்தயம் – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – 1 கொத்து

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

செய்முறை

வாழைத்தண்டுகளை நன்றாக நறுக்க வேண்டும். (வாழைத்தண்டுகளை நறுக்குவதற்கு என்று ஒரு முறை உள்ளது. அது வாழைத்தண்டுகளில் உள்ள நாரை சுத்தம் செய்து நீங்கள் நறுக்கவேண்டும்) அதை குக்கரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை குக்கரில் இருந்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதில் புளித்தண்ணீர் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் மசாலா, துவரம் பருப்பு சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ள வேண்டும்

மசாலாக்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து அரைத்தும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது நீங்கள் வழக்கமாக வாங்க பயன்படுத்தும் மசாலாக்களாகவும் இருக்கலாம்.

இதை கடுகு, கறிவேப்பிலை கொண்டு தாளத்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்