தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Balanced Diet : இந்தியர்கள் சரிவிகித உணவை எடுப்பதில்லை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Balanced Diet : இந்தியர்கள் சரிவிகித உணவை எடுப்பதில்லை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Priyadarshini R HT Tamil
Aug 30, 2023 12:00 PM IST

Balanced Diet : மேலும், மிகவும் பயனளிக்கும் உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தேவையான அளவிற்கு இல்லாமல் இருப்பதும், (அதனால் தேவையான அளவு நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் கிடைப்பதில்லை)

இந்தியர்கள் சரிவிகித உணவை எடுப்பதில்லை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இந்தியர்கள் சரிவிகித உணவை எடுப்பதில்லை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ட்ரெண்டிங் செய்திகள்

இத்தகைய தவறான உணவு தேர்வுகளால், பெண்களும், கிராமப்புற மக்களும் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

எது சரிவிகித சத்தான உணவு?

முழு தானியங்கள் (Whole grains) – 32 சதவீதம்

தாவரப்புரதம் (பருப்புவகைகள்) – 23 சதவீதம்

பால் பொருட்கள் – 5 சதவீதம் என்று இருக்க வேண்டும்.

ஆனால், இந்திய உணவில், 25 சதவீதம் பால் பொருட்கள், 23 சதவீதம் தேவையற்ற கொழுப்புகள், 15 சதவீதம் முழுக் தானியங்கள் (உமி நீக்கப் படாதது), 4 சதவீதம் தாவரப்புரதம் என தவறான விகிதத்தில் உள்ளது.

மேலும், மிகவும் பயனளிக்கும் உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தேவையான அளவிற்கு இல்லாமல் இருப்பதும், (அதனால் தேவையான அளவு நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் கிடைப்பதில்லை)

இதில் ஏழைகளைவிட பணக்காரர்கள் அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வதும் தெரியவந்துள்ளது.

பொதுவாக, காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவாகவும், பால்பொருட்கள், தேவையற்ற கொழுப்புகள் அதிகமாகவும் உணவில் இருப்பது தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில், மாவுச்சத்து தேவைக்கு அதிகமாகவும், நகர்ப்புறங்களில், காய்கறிகள் மற்றும் பழங்கள், புரதச்சத்து அதிகமாகவும் உண்ணப்படுவது தெரிய வந்துள்ளது.

கிராமப்புறங்களில் முழு தானியங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பது நல்லது. பெண்கள் மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும், ஆண்கள் விலங்கு புரதம் (Nonvegetarian protein) அதிகம் எடுத்துக்கொள்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, ஆய்வாளர் பேராசிரியர் சைலேஷ் மோகன் கூறுகையில்,

‘சுகாதாரத்தை பேணிகாக்கும், சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவில் குறைவாகவும், சுகாதாரத்திற்கு அதிகம் பாதிப்புகளை எற்படுத்தும் பால் பொருட்கள், உமி நீக்கப்பட்ட அரிசி, மைதா, சுத்தப்படுத்துவதாகக் கூறி சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் சீனி போன்ற உணவுகளால் நோய்கள் அதிகமாவதால்,உணவில் தக்க மாற்றங்களை கொண்டு வந்து இதய, சர்க்கரை மற்றும் பிற நோய்களைத் தடுக்க அரசுகள் தேவையான கொள்கை முடிவுகளை உடனே எடுத்தால் மட்டுமே,மக்களை நோய் பாதிப்பிலிருந்து காக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார். எனவே இதை கருத்தில்கொண்டு அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்