Badam Pisin Custard : பாதாம் பிசின் கஸ்டட்! அரிசி, பால், தேங்காய் இருந்தால் போதும்! சூப்பர் சுவையில் செய்து அசத்தலாம்!
Badam Pisin Custard : பாதாம் பிசின் கஸ்டட். அரிசி, பால், தேங்காய் இருந்தால் போதும். சூப்பர் சுவையில் செய்து அசத்தலாம். வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.
பாதாம் பிசினின் நன்மைகள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவையும் அறிந்துகொள்வது அவசியம். பாதாம் மரத்தில் இருந்து வடியும் கம் அல்லது கோந்து அல்லது பிசின் போன்றது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது. பாதாம் பிசினில் 92.3 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2.4 சதவீதம் புரதம் மற்றும் 0.8 சதவீத கொழுப்பு உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்தும் நிறைந்துள்ளது. மரத்தில் இருந்து வெளியேறும் பிசின் கத்தியில் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு சுவையும், மணமும் கிடையாது. இயற்கையானது, தண்ணீரில் கரையக்கூடியது. இது காயவைத்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது. ஜெல்லி போல் இருக்கும் பாதாம் பிசினை காயவைத்தால் அது கட்டியாகிவிடும். பார்க்க கற்கண்டு போல் இருக்கும். மரத்தில் கொஞ்சம் இலைகளும், பூக்களும் இருக்கும் இலையுதிர் காலத்தில் இது பெறப்படுகிறது. காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது. பாதாம் பிசின் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு தருகிறது.
பாதாம் பிசினின் நன்மைகள்
உடலை இயற்கையான முறையில் குளிர்விக்கிறது.
உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.
கொழுப்பை குறைக்கிறது.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது.
வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது.
தசைகளை வலுப்படுத்துகிறது.
பருவகால பிரச்னைகளை போக்குகிறது.
கருவுறுதலுக்கு உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் உதவுகிறது.
சருமத்தில் உள்ள காயங்களை விரைந்து குணப்படுத்த உதவுகிறது.
உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த பாதாம் பிசினில் எளிதாக தயாரிக்கலாம் பாதாம் கஸ்டட். அதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பாதாம் பிசின் – 4
மாம்பழம் – 1
நட்ஸ் பொடி – 4 டேபிள் ஸ்பூன்
பாஸ்மதி அரிசி – அரை கப்
பால் பவுடர் – 3 ஸ்பூன்
தேங்காய் துருவல் – அரை கப்
பால் – அரை லிட்டர்
சர்க்கரை அரை கப்
செய்முறை
பாதாம் பிசினை ஓரிரவு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். மாம்பழத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள பல்பை எடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் ஊறிய பாதாம் பிசினை சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். இந்த கலவையை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பாஸ்மதி அரிசியை ஊறவைத்து உலர்ந்த துணியில் நிழலில் காய வைத்து எடுத்துக்கொள்வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். தேங்காய் துருவலுடன் சிறிது பால் சேர்த்து அதையும் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் பாலை காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்தவுடன், அதில் அரிசி, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக வேகவிடவேண்டும். வெந்து வரும்போது அதில் சர்க்கரை மற்றும் பால்பவுடரை சேர்த்து கெட்டியாக கிளறி எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதை ஆறவைத்து பிரிட்ஜில் வைத்துவிடவேண்டும். சிறிது நேரம் குளுமையானவுடன், பரிமாறும் கிண்ணத்தில் அடியில் அரிசி கலவையை அடியில் வைத்து அதன்மேல் மாம்பழ பாதாம் பிசின் கலவையை வைத்து, ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி பரிமாறவேண்டும். இதை குளுகுளுவென சாப்பிட சூப்பர் சுவையில் அசத்தும்.
இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதுபோன்ற பல்வேறு நல்ல ரெசிபிக்களை ஹெச்.டி. தமிழ் தொடர்ந்து வழங்கிவருகிறது. படித்து பயன்பெறுங்கள். ஆரோக்கியமுடன் வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்