Lung Care : 21 நாள் மட்டும் இந்த தேநீர் போதும்! இரைப்பை மற்றும் நுரையீரல் பிரச்னைகளை குணப்படுத்தும்!-lung care this tea is enough for 21 days only cure stomach and lung problems - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Lung Care : 21 நாள் மட்டும் இந்த தேநீர் போதும்! இரைப்பை மற்றும் நுரையீரல் பிரச்னைகளை குணப்படுத்தும்!

Lung Care : 21 நாள் மட்டும் இந்த தேநீர் போதும்! இரைப்பை மற்றும் நுரையீரல் பிரச்னைகளை குணப்படுத்தும்!

Priyadarshini R HT Tamil
Mar 13, 2024 12:55 PM IST

lung care : உங்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகொடுக்கும் இந்த மூலிகையை பயன்படுத்தி பலன்பெறுங்கள். பெரும்பாலும் இதை அடிக்கடி சேர்ப்பதை உறுதிப்படுத்தினால் போதும். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும்.

Lung Care : 21 நாள் மட்டும் இந்த தேநீர் போதும்! இரைப்பை மற்றும் நுரையீரல் பிரச்னைகளை குணப்படுத்தும்!
Lung Care : 21 நாள் மட்டும் இந்த தேநீர் போதும்! இரைப்பை மற்றும் நுரையீரல் பிரச்னைகளை குணப்படுத்தும்!

இதை 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒற்றை தலைவலி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு பிரச்னைகள் குணமாகும். தேவையற்ற டென்சன், நரம்பு படபடப்பு மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகியவை குணமாகும்.

சத குப்பை – 2 ஸ்பூன்

(வாத நோய்களை கட்டுப்படுத்தும், இரைப்பை மற்றும் நுரையீரலை சுத்தம் செய்யும். சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும், சைனஸ், தலையில் நீர் கோர்ப்பது, காது மந்தமாக இருப்பது, கர்ப்பபை கோளாறை சரிசெய்யும், நமது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ரத்த சோகை பிரச்னையை சரிசெய்யும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யும். பெண்களுக்கு டென்சன், படபடப்பை குறைக்கும்)

நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி – 2 ஸ்பூன்

இரண்டையும் சேர்த்து அரைத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி பருகவேண்டும்.

காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் குடித்துவர பாதிப்புகள் அனைத்தும் குணமாகும். நரம்பு பிரச்னைகள் அனைத்தையும் குணப்படுத்தும். பின்னங்கால் நரம்பு இழுக்கும் பிரச்னைகளை கூட சரிசெய்யும். சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துக்கொள்ளும்போது இனிப்பு சேர்க்கக்கூடாது.

சதகுப்பையின் நன்மைகள்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சதைகுப்பையுடன், கருஞ்சீரகம், மஞ்சள் மூன்றையும் ஒரே அளவு எடுத்து, சமஅளவு பனைவெல்லத்துடன் சாப்பிட்டால் மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தும். இதனுடன் சோம்பு தண்ணீர் சேர்த்து பருகவேண்டும்.

பால் சுரக்க சதகுப்பையுடன் அமுக்காரா சூரணத்தை சமஅளவு சாப்பிடவேண்டும். பிரசவித்த பெண்களுக்கு செரிமான கோளாறை சரிசெய்ய உதவுகிறது. பிரசவத்துக்குப்பின் கருப்பை அழுக்குகள் வெளியேற உதவுகிறது.

சதகுப்பையை குழந்தைகளின் வயிற்று வலிக்கு கொடுத்தால் அது குணமாகும். வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் ஆகிய பிரச்னைகள் இருக்கும்போது, சதகுப்பை குணமளிக்கிறது. ஆசனவாயில் ஏற்படும் பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது. கை-கால் வலிப்பு நோயை குணப்படுத்துகிறது. கட்டிகளை போக்குகிறது. வாத நோய்களை கட்டுப்படுத்துகிறது.

இரைப்பை மற்றும் நுரையீரலை சுத்தம் செய்கிறது. சிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

உங்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகொடுக்கும் இந்த மூலிகையை பயன்படுத்தி பலன்பெறுங்கள். பெரும்பாலும் இதை அடிக்கடி சேர்ப்பதை உறுதிப்படுத்தினால் போதும். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.