Gooseberry Rasam : ருசியான ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது? இதோ பாருங்க ஈஸி டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gooseberry Rasam : ருசியான ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது? இதோ பாருங்க ஈஸி டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க!

Gooseberry Rasam : ருசியான ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது? இதோ பாருங்க ஈஸி டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க!

Divya Sekar HT Tamil
May 22, 2024 09:35 AM IST

Gooseberry Rasam : ருசியான ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். இதில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கு.

ருசியான ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது? இதோ பாருங்க ஈஸி டிப்ஸ்..
ருசியான ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது? இதோ பாருங்க ஈஸி டிப்ஸ்..

தேவையான பொருட்கள்

ஒரு ஸ்பூன் சீரகம்

ஒரு ஸ்பூன் வர மல்லி

ஒரு ஸ்பூன் மிளகு

இரண்டு காய்ந்த மிளகாய்

நான்கு நெல்லிக்காய்

பத்து பல் பூண்டு

2 டீஸ்பூன் எண்ணெய்

ஒரு தக்காளி

துவரம் பருப்பின் தண்ணீர்

கொத்தமல்லியின் தண்டு

உப்பு

மஞ்சள் தூள்

நெல்லிக்காய் சைஸ் புளி

நெல்லிக்காய் ரசம் செய்முறை

ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வர மல்லி, ஒரு ஸ்பூன் மிளகு, இரண்டு காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் நன்கு கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் விதைகளை நீக்கிய மூன்று அல்லது நான்கு நெல்லிக்காய், பத்து பல் பூண்டு சேர்த்து நன்கு தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு மைய அரைக்க வேண்டும் என்பதில்லை தட்டி எடுத்துக் கொண்டாலே போதும்.

பின்னர் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நாம் தட்டி வைத்த இந்த நெல்லிக்காயை போட்டு வதக்கவும். பின்னர் அதில் நன்கு பழுத்த ஒரு தக்காளியை கையில் பிசைந்து அதில் சேர்க்கவும். பின்னர் நாம் ஊற வைத்த துவரம் பருப்பின் தண்ணீர் ஊற்றி, கொத்தமல்லியின் தண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தக்காளி வேகம் அளவிற்கு கொதிக்க விடவும்.

பின்னர் ஒரு நெல்லிக்காய் சைஸ் புளி கரைசலை ஊற்றி கொத்தமல்லி தலையை தூவி விடவும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். அது கொதித்துக் கொண்டு இருக்கட்டும்.

பின்ன தாழிப்பு கரண்டியில் ஒரு டீஸ்பூன் நெய் கடுகு கள்ள பருப்பு பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். இதனை நாம் ரெடி பண்ணி வைத்த ரசம் அடுப்பை அணைத்துவிட்டு இதனை சேர்க்கவும். அவ்வளவுதான் ருசியான ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் ரெடி.

நெல்லிக்காயில் உள்ள நன்மைகள்

வைட்டமின் சி சத்து நிறைந்தது

வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது அழற்சியை குறைக்கிறது. நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடும்போது அது மூட்டு வலியை குணப்படுத்துகிறது. வீக்கத்தை தடுக்கிறது.

செரிமானத்துக்கு உதவுகிறது

வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.

உடல் வளர்சிதைக்கு உதவுகிறது

நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும்.

நெல்லிச்சாறு மூலம் உங்கள் உடலின் கழிவுகளை நீக்கலாம்

உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீங்கள் நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது. உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது

தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தலைமுடியை வலுவாக்குகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது.

மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது

இதில் உள்ள அடாப்டோஜெனிக் உட்பொருள், மனஅழுத்ததை குறைக்க உதவுகிறது. மனத்தெளிவை அதிகரிக்கிறது. உடல் மற்றும் உணர்வு ரீதியிலான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

கண்பார்வை மேம்பட உதவுகிறது

இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. நெல்லிச்சாறை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கண்ணில் நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.