Diabetes Care : உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வாய்ப்பு உள்ளதா? முன்கூட்டியே அறிய முடியும்? இது எப்படி சாத்தியம்?
Diabetes Care : இதற்கு முன்னர் வெறும் வயிற்றில் குளுக்கோஸின் அளவு 120 மி.கி. அதிகமாக 2 முறை இருப்பது உணவிற்குப் பின் 2 மணி நேரம் கழித்து குளுக்கோஸின் அளவு 200 மி.கி அதிகமாக 2 முறை இருந்தால் அதை சர்க்கரைநோய் வகை 2 இருப்பதாக வகைப்படுத்துவர்.

சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பு (International Diabetes Federation) அண்மையில் வாய் வழியாக குளுக்கோஸ் (75 கிராம்) கொடுத்து ஒரு மணி நேரம் கழித்து (OGTT பரிசோதனை) ரத்தத்தில் அளக்கப்படும் குளுக்கோஸின் அளவைக்கொண்டு யாருக்கு பிற்காலத்தில் சர்க்கரைநோய் வகை 2 வரும் வாய்ப்பு அதிகம் என மேலும் துல்லியமாகக் கண்டறிய முடியும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரு மணி நேரம் கழித்து ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு 155 மி.கிராம்/100 மில்லி ரத்தம் (8.6 mmol/லிட்டர்) அதிகமாக இருந்தால் அதை சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை Pre-diabetes என முன்னரும், தற்போது அதை Intermediate Hyperglycemia என்றும் உலகளவில் பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரம் கழித்து ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு 209 மி.கிராம்/100 மில்லி ரத்தம் அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் வகை 2 என உறுதிபடுத்தலாம்.