தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nita Ambani Tea Price: முகேஷ் அம்பானி நீதா அம்பானி குடிக்கும் டீயின் விலை இத்தனை லட்சமா!

Nita Ambani Tea Price: முகேஷ் அம்பானி நீதா அம்பானி குடிக்கும் டீயின் விலை இத்தனை லட்சமா!

I Jayachandran HT Tamil
Apr 26, 2023 01:21 PM IST

நீதா அம்பானி காலையில் எடுத்து கொள்ளும் டீயின் விலை 3 லட்சம் என சொல்லப்படுகிறது. இதை கேட்டதும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை.

அம்பானி மனைவி நிதா அம்பானி டீ விலை
அம்பானி மனைவி நிதா அம்பானி டீ விலை

ட்ரெண்டிங் செய்திகள்

ஆசியாவிலேயே பணக்காரக் குடும்பமாக இருக்கும் அம்பானி குடும்பம் தற்போது அடைந்திருக்கும் வளர்ச்சி அவர்களின் உழைப்பையும், தொழில் நேர்த்தியையும் காட்டுகிறது. அம்பானியின் மனைவியான நீதா அம்பானி, ஆரம்ப காலத்தில் இருந்தே அம்பானியின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

அம்பானியின் பிசினஸை ஆசியா அளவில் விரிவுப்படுத்தியதில் நீதா அம்பானியின் பங்கு பெரியது. வெறும் பிசினஸ் பெண்மணியாக மட்டும் இல்லாமல், சிறந்த அம்மாவாக, சிறந்த மாமியாராக, தற்போது சிறந்த பாட்டியாகவும் உள்ளார். ஒரே நேரத்தில் இத்தனை விஷயங்களை கவனித்து கொள்ளும் நீதா அம்பானி தனது உடல் ஆரோக்கியத்திலும் அதிகளவு அக்கறை எடுத்து கொள்கிறார்.

மேக்கப் தொடங்கி ட்ரெஸ், உடற்பயிற்சி, யோகா என நீதா அம்பானி தன்னை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்து கொள்ள பல விஷயங்களை செய்கிறார். அதில் மிக மிக முக்கியமானது காலையில் அவர் எடுத்து கொள்ளும் டீ.

நீதா அம்பானி குடிக்கும் டீயின் விலை

நீதா அம்பானி காலையில் எடுத்து கொள்ளும் டீயின் விலை 3 லட்சம் என சொல்லப்படுகிறது. இதை கேட்டதும் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை. நீதா அம்பானி தங்க கோப்பையில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர். ஜப்பான் தயாரிப்பான நோரிடெக் பிராண்டு தான் இந்த டீ கப்பை தயாரிக்கிறது.

ஜப்பானில் மிகவும் பிரபலமான இந்த பிராண்டின், தங்க பார்டர் கொண்ட கப்பை தான் நீதா அம்பானி பயன்படுத்துகிறார்.

தங்க கப்பில் எடுத்து கொள்ளும் உணவு உடலுக்கு மிகுந்த ஆரொக்கியத்தை தரக்கூடியது எனவும் சொல்லப்படுகிறது. இந்த முழு கப் செட்டியின் விலை 1.5 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. ஒரு செட்டில் 50 கப்கள் இருக்குமாம். இதை நீதா அம்பானி பேட்டில் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

நீதா அம்பானி உணவு மற்றும் உடற்பயிற்சி

நீதா அம்பானியின் காலை உணவு மிகவும் எளிமையானது. நீதா அம்பானி காலை உணவில் முட்டை, பாதாம் மற்றும் வால்நட்ஸின் வெள்ளைப் பகுதியை சாப்பிடுகிறார். காலை உணவுக்கு முன் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கிறார்.

நீதா அம்பானி யோகா மற்றும் நீச்சல் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். இதற்குப் பிறகுதான் காலை உணவை எடுத்து கொள்கிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்