Yogurt Mask: முகத்தில் அற்புதம் நிகழ்த்தும் யோகர்ட் மாஸ்க்! வீட்டிலேயே செய்வது எப்படி?
சருமத்தின் அமைப்பை மாற்றவும், பருக்களை போக்கவும் ஃபேஸ் மாஸ்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் வீட்டியிலே தயார் செய்யக்கூடிய யோகர்ட் பேஸ் மாஸ்குகள் செய்யும் அற்புதங்களை பார்க்கலாம்

அழகான சருமத்தை பெறுவதற்கான எளிதான மற்றும் சிறந்த தீர்வுகளில் ஒன்றாக ஃபேஸ் மாஸ்குகள் உள்ளன. சில வாரங்கள் மட்டும் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளவதோடு மட்டுமில்லாமல், உங்கள் சருமத்துக்கு அதிக தீங்கு விளைவிக்காத வகையில் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய அழகு சாதன பொருளாக உள்ளது.
பளபளப்பான சருமத்தை பெற விரும்பும் அனைவருக்கும் இது சிறந்த தேர்வாகும். உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் யோகர்த் சேர்த்து கொள்ளும்போது, சருமம் அழகுடனும், பொலிவுடனும் இருப்பதை உறுதி செய்யலாம்.
யேகர்ட் மாஸ்க் தயார் செய்து சருமத்தில் பயன்படுத்தும் முறையை, அவற்றால் கிடைக்கும் நன்மைகளையும் பார்க்கலாம்
சருமத்தின் அழுக்கு செல்களை வெளியேற்றுகிறது
யோகர்டில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது தோல் செல்களை சுத்தம் செய்யவும், உரிக்கவும் உதவுகிறது.
2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இறந்த சரும செல்களை அகற்றும் போது லாக்டிக் அமிலம் தோல்களில் எரிச்சலை ஏற்படுத்தாது.
வயதாகும் அறிகுறியை தாமதப்படுத்துகிறது
யோகர்ட் பயன்படுத்துவதால் சருமத்தில் வயதாகும் அறிகுறி ஏற்படுவதை குறைக்கிறது. யோகர்டில் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளை கொண்ட பயோஆக்டிவ் பெப்டைட் உள்ளன. இந்த பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராட உதவுகின்றன.
சருமத்தை பிரகாசமாக்கும்
யோகர்டில் இருக்கும் லாக்டிக் அமிலம் டைரோசினேஸ் உருவாவதைத் தடுக்கிறது. டைரோசினேஸ் என்பது மெலனின் உற்பத்தி செய்யும் நொதி ஆகும். இது உங்கள் சருமத்தை கருமையாக்கும்.
2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வின்படி, யோகர்ட் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது.
முகப்பருவை குறைக்க உதவுகிறது
யோகர்டில் துத்தநாகம் இருப்பதால், இது முகப்பருவை தடுக்க உதவுகிறது, இதன் மூலம் சருமம் இயற்கையான பளபளப்பை பெறுகின்றன.
தோல் தொற்றுநோயை எதிர்த்து போராடுகிறது
தோல் தொடர்பான தொற்றுகளில் இருந்து விடுபட யோகர்ட் ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சருமம், தோல் சார்ந்த நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது.
வீட்டிலேயே யோகர்ட் மாஸ்க் செய்யும் முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
அவகேடோ மற்றும் யோகர்ட் மாஸ்க்
யோகர்ட் - அரைகப்
அவகோடா - அரைகப்
கற்றாழை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இந்த மூன்று பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து, அதை முகத்தில் சமமான அளவில் தேய்க்க வேண்டும். இதன் பின்னர் 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து கழுவிய பின் மாற்றத்தை காணலாம்
ஓட்மீல் யோகர்ட் மாஸ்க்
யோகர்ட் - 1 டேபிள் ஸ்பூன்
ஓட்மீல் - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - அரை டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பவுலில் அனைத்தையும் சேர்த்து முகம் மற்றும் கழுத்து பகுதி வரை தேய்க்கவும். பின் 20 நமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
யோகர்ட் மற்றும் தேன் மாஸ்க்
யோகர்ட் - அரைகப்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இந்த இரண்டையும் ஒரு கப்பில் சேர்த்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி விட வேண்டும். இதன் பின் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும்
மஞ்சள் மற்றும் யோகர்ட் மாஸ்க்
யோகர்ட் - அரைகப்
மஞ்சள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இவை இரண்டையும் சேர்த்து பேஸ்ட்டாக்கி முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்