தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Onam Special Ada Pradhaman : ஓணம் ஸ்பெஷல் ரெசிபி; அடை பிரதமன், உடனே டிரை பண்ணி பாருங்க!

Onam Special Ada Pradhaman : ஓணம் ஸ்பெஷல் ரெசிபி; அடை பிரதமன், உடனே டிரை பண்ணி பாருங்க!

Priyadarshini R HT Tamil
Aug 29, 2023 12:01 PM IST

Onam Special Recipe : ஓணம் வாழ்த்துக்களுடன் ஓணம் ஸ்பெஷல் ரெசிபி அடை பிரதமனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறது. ஹெச்.டி தமிழ்.

ஓணம் ஸ்பெஷல் இனிப்பு - அடை பிரதமன் செய்வது எப்படி?
ஓணம் ஸ்பெஷல் இனிப்பு - அடை பிரதமன் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

வெல்லம் – 1 கப்

தேங்காய் முதல் பால் – 1 கப்

தேங்காய் 2வது பால் – அரை கப்

நெய் – 1 ஸ்பூன்

முந்திரிகள் – 8

தேங்காய் – 1 ஸ்பூன்

ஏலக்காய் பொடி – சிறிதளவு

செய்முறை

அடையை சுடு தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு, நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.

தண்ணீரை சூடாக்கி, அடையை அதில் சேர்க்க வேண்டும். அது மிருதுவாகும் வரை சமைக்க வேண்டும். இது கொஞ்சம் மிருதுவானால் போதும். அடுத்ததாக வெல்லம் மற்றும் தேங்காய்ப்பாலில் அது கொதிக்கும்.

தண்ணீரை வடித்துவிட்டு, அதை தனியாக வைக்க வேண்டும்.

ஒரு கப் வெல்லத்துடன் அரைகப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரை விட்டு அடுப்பை அணைத்துவிடவேண்டும்.

அதை நன்றாக வடிகட்டிக்கொள்ள வேண்டும். தூசிகள் இருந்தால், அவற்றையும் எடுத்துவிட வேண்டும்.

தற்போது வெல்லம் கரைந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும். இப்போது ஊறவைத்த அடையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடை மிருதுவாகும் வரை வேகவிடவும். அப்போதுதான் வெல்லப்பாகு நன்றாக அடையில் சேரும்.

அதில் அரைகப் தேங்காயின் இரண்டாவது பாலை சேர்க்க வேண்டும்.

மிதமான தீயில் வேகவிடவும்.

அடைபிரதமன் கெட்டியாகி வரும்.

இப்போது தேங்காயின் முதல் பாலை சேர்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்மாக சேர்த்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

நன்றாக கலந்து சிம்மில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

நெய், ஏலக்காய் சேர்க்க வேண்டும்.

மற்றொரு கடாயில் நெய்யை சூடாக்கி, தேங்காய் பற்களை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் முந்திரிகளை வறுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் சேர்த்தால், ஓணம் ஸ்பெஷல் அடை பிரதமன் சாப்பிட தயாராக உள்ளது.

நீங்கள் அடையை வீட்டிலேயே தயாரித்தும் செய்யலாம். கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம். இரண்டுக்கும் சுவை வித்யாசம் வரும். கடையில் வாங்கும் அடை மெல்லிசாக இருக்கும். எனவே உடனே மிருதுவாகிவிடும். அதை, கவனமாக செய்ய வேண்டும்.

நல்ல வெல்லத்தை பயன்படுத்த வேணடும். அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும். வெல்லத்தின் நிறத்திற்கு ஏற்ப பிரதமனின் நிறமும் மாறும்.

புதிதாக எடுத்து செய்யும் தேங்காய்ப்பால்தான் சிறந்தது. எனவே புதிய பாலை எடுத்துக்கொள்ளுங்கள். கடைகளில் வாங்காதீர்கள்.

கொஞ்சம் தண்ணீராக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நேரம் ஆக ஆக அடைபிரதமன் திக்காகும். எனவே அதற்கு ஏற்றாற்போல் வைக்க வேண்டும்.

சுவையை அதிகரிக்க உலர் திராட்சை, உலர் பழங்கள், பாதாம் என சேர்க்கலாம். ஆனால் அவற்றை அதிகம் சேர்த்து அடை பிரதமனின் சுவையை மாற்றிவிடக்கூடாது.

WhatsApp channel

டாபிக்ஸ்