ஒரு வாரம் கெடாது; செஞ்சு வெச்சுட்டு ரெஸ்ட் எடுங்க! கறிவேப்பிலை, பூண்டு, மிளகு குழம்பு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஒரு வாரம் கெடாது; செஞ்சு வெச்சுட்டு ரெஸ்ட் எடுங்க! கறிவேப்பிலை, பூண்டு, மிளகு குழம்பு!

ஒரு வாரம் கெடாது; செஞ்சு வெச்சுட்டு ரெஸ்ட் எடுங்க! கறிவேப்பிலை, பூண்டு, மிளகு குழம்பு!

Priyadarshini R HT Tamil
Nov 04, 2024 03:57 PM IST

ஒரு வாரம் வரை கெடாது, செஞ்சு வெச்சுட்டு ரெஸ்ட் எடுக்க வசதியான ரெசிபி. அதற்கு இந்த கறிவேப்பிலை, பூண்டு, மிளகு குழம்பை செய்து வைத்துக்கொள்ளுங்கள் .

ஒரு வாரம் கெடாது; செஞ்சு வெச்சுட்டு ரெஸ்ட் எடுங்க! கறிவேப்பிலை, பூண்டு, மிளகு குழம்பு!
ஒரு வாரம் கெடாது; செஞ்சு வெச்சுட்டு ரெஸ்ட் எடுங்க! கறிவேப்பிலை, பூண்டு, மிளகு குழம்பு!

தேவையான பொருட்கள்

பூண்டு – 100 கிராம் (தோல் உறித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

மிளகு – ஒரு ஸ்பூன்

வர மிளகாய் – 2

வரமல்லி – ஒரு ஸ்பூன்

கடலை பருப்பு – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

எண்ணெய் – 100 மில்லி லிட்டர்

(சூடான தண்ணீரில் ஊறவைத்து கெட்டியான புளிக்கரைசலை எடுத்துக்கொள்ளவேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் வரமிளகாய், வரமல்லி, மிளகு, கறிவேப்பிலை, கடலை பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உரித்த பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றவேண்டும். உப்பு, அரைத்த விழுது, பூண்டு என அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அடுத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவேண்டும்.

அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில், எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து தாளித்து இந்த குழம்பில் கொட்டி, இறக்கினால், சூப்பர் சுவையான பூண்டு, மிளகு, கறிவேப்பிலை குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய்விட்டு சாப்பிட சுவை அள்ளும்.

குறிப்புகள்

பொதுவாகவே புளிக்குழம்பு வகைகள் செய்வதற்கு மண் பாத்திரங்களை பயன்படுத்தவேண்டும். அதேபோல் நல்லெண்ணெய்தான் சிறந்தது.

இதை ஒரு வாரம் வரை வைத்துக்கொண்டு சாப்பிடலாம் என்பதால், செய்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது வெளியே எடுத்து சிறிது நேரம் ஆறவிட்டு, பின்னர் அடுப்பில் வைத்து சூடாக்கி சாப்பாடு அல்லது இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.