'நான் தான் ஐஸ்வர்யா ராய் பையன்.. கல்யாணத்துக்கு முன்னாடியே பொறந்துட்டேன்'.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய நபர்
ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் விவாகரத்து விஷயம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, ஒருவர், தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என கூறிக்கொண்டு வருவது சர்ச்சைகளை அதிகரித்துள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட்டில் மாபெரும் நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை சுமார் 15 வருடங்களுக்கு மேல் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், சமீப காலமாக ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் தம்பதி விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் பரவி வந்த வண்ணமாகவே உள்ளது.
வீடியோவால் வெடித்த விவகாரம்
இந்நிலையில், தன்னை ஐஸ்வர்யா ராயின் மகன் எனக் கூறிக் கொண்டு இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து விஷயம் மீண்டும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவில், " நான் ஐஸ்வர்யா ராயின் மகன். என் பெயர் சங்கீத் குமார். ஐஸ்வர்யா ராய் 15 வயதாக இருந்த போது நான் பிறந்தேன். லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐஸ்வர்யா ராய் என்னை IVF முறையில் பெற்றெடுத்தார். பின் அவரது பெற்றோர் என்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் தான் என்னை வளர்த்தனர். அப்போது, நான் பிறந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் மொத்தமாக அழித்துவிட்டனர், இப்போது என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.
இவரது இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோ குறித்து பலரும் ஆராய்ந்து வந்தனர். அதில் இந்த வீடியோ 4 ஆண்டுகளுக்கு முன் எடுத்த ஒன்று. வீடியோவில் பேசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே, ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் விவாகரத்து விஷயம் பாலிவுட்டில் பூகம்பமாய் பற்றி எரியும் நிலையில், சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற வீடியோக்களையும், போலியான தகவல்களையும் பரப்பி வருகின்றனர்.
நடிகையுடன் அபிஷேக் பச்சனுக்கு தொடர்பு?
முன்னதாக சில தரப்பு ஐஸ்வர்யா ராயையும், சில தரப்பு அபிஷேக் பச்சனையும் குறை சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் தான். சில மாதங்களாக அபிஷேக் பச்சனுக்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு தஸ்வி எனும் திரைப்படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நிம்ரத் கவுர் நடித்திருப்பார். அந்த சமயத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் தான் தற்போது ஐஸ்வர்யா ராயுடன் பிரிந்து வாழும் நிலைக்கு அபிஷேக் பச்சனை தள்ளி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமண வாழ்க்கை நீடிக்காது!
முன்னதாக நிம்ரத் கவுரும் அபிஷேக் பச்சனும் தஸ்வி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வீடியோ இப்போது வைரலாகிறது. அந்த புரொமோஷன் நிகழ்ச்சியில், அபிஷேக் பச்சன் சமீபத்தில் தனது 15வது திருமண நாள் கொண்டாட்டம் குறித்து பேசிக் கொண்டிருப்பார். அப்போது குறுக்கிட்ட, நிம்ரத் கவுர் அந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்காது என பொது வெளியிலேயே கூறி இருப்பார். இதைக் கேட்டு ஆத்திரப்படாத அபிஷேக் பச்சன், நிம்ரத் கவுரிடம் நன்றி என பதில் பேசி இருப்பார்.
ரசிகர்கள் குமுறல்
இந்க வீடியோவை இப்போது நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து, எப்படி அபிஷேக் பச்சனால் ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு துரோகத்தை செய்ய முடிந்தது. ஐஸ்வர்யா ராய் மீது எத்தனைப் பேர் பிரியம் வைத்துள்ளனர். ஆனால், அவர் உங்களைத் தான் விரும்பி திருமணம் செய்து கொண்டார். அப்படி இருக்கையில், எப்படி இன்னொரு பெண்ணிடம் நீங்கள் பழக முடியும் என மிகவும் காட்டமாக அபிஷேக் பச்சனை விமர்சித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்