Typhoid : சால்மொனெல்லா கிருமி ஏற்படுத்தும் டைபாய்டு நோய் சிகிச்சைக்கு புது மருந்து- மருத்துவர் சொல்வது என்ன?
சால்மொனெல்லா கிருமி ஏற்படுத்தும் டைபாய்டு நோய் சிகிச்சைக்கு புது மருந்து. DFMO மருந்து டைபாய்டு நோய் சிகிச்சைக்கு உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுவதுடன்,ஸ்பெர்மிடின் உற்பத்தியை குறைக்கும்,பிற புது கண்டுபிடிப்புகளும்,டைபாய்டு நோயை கட்டுப்படுத்த உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Indian Institute of Science நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,டைபாய்டு காய்ச்சல்,அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும்,சால்மொனெல்லா டைபிமியூரியம் கிருமி "ஸ்பெர்மிடின்-Spermidine"எனும் மூலக்கூறுவை பயன்படுத்தி,மனிதர்களின் நோய் எதிர்ப்பு தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்வதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
ஸ்பெர்மிடின் உற்பத்தியை குறைக்கும் மருந்துகள் மூலம்,சாமொனெல்லா கிருமி உடம்பின் நோய்எதிர்ப்புத் திறனிலிருந்து தப்பிக்காவண்ணம் பார்த்துகொள்ள முடியும்.
கிருமிக்கொல்லிகளின் பயன்பாடு தேவையற்றும் முறையற்றும் இருப்பதால்,டைபாய்டு கிருமிகள் கிருமிக்கொல்லிகளுக்கு அதிக அளவில் எதிர்ப்புத்தன்மை பெற்றுவருவது கள உண்மையாக மாறிவருகிறது.
கிருமிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத்தன்மை பெற்ற சால்மொனெல்லா கிருமிகளை கட்டுப்படுத்த முடியாமல் போவதால்,பாதிப்புகளும்,உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது.
டைபாய்டு கிருமியை கட்டுப்படுத்தலாம்
Redox Biology எனும் ஆய்வு மருத்துவ நூலில் வெளியான கட்டுரை,சால்மொனெல்லா கிருமி எவ்வாறு ஸ்பெர்மிடின் எனும் மூலக்கூறுவை பயன்படுத்தி உடம்பின் நோய்எதிர்ப்பு சக்தி தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்கிறது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆப்பிரிக்க தூக்க நோய்க்கு(African Sleeping Sickness)மருந்தாக பயன்படும்,D,L alpha-difluoromethylornithine(DFMO- FDA அங்கீகாரம் பெற்ற) எனும் மருந்து,ஸ்பெர்மிடின் உற்பத்தியை குறைப்பது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால்,அதை பயன்படுத்தி,நோய்எதிர்ப்பு சக்தியின் ஆற்றலை பெருக்கி டைபாய்டு கிருமியை கட்டுப்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சால்மொனெல்லா கிருமிகள் உடம்பினுள் சென்றவுடன் மேக்ரோபேஜஸ் எனும் செல்களால் விழுங்கப்படுகின்றன. பின் மேக்ரோபேஜஸ் செல்கள், Reactive Oxygen,nitrogen species வேதிப்பொருட்களை அதனுள் அதிகம் உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும்
நோய்எதிர்க்கும் திறன்
பொருட்கள் கிருமிகள் வளரும் சூழலுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தி அவை அழிய காரணாமாக உள்ளன.
உடம்பு(Host),சால்மொனெல்லா பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் ஸ்பெர்மிடின் எனும்மூலக்கூறு Reactive Oxygen Species மூலம் ஏற்படும் அழிவிலிருந்து, பாதுகாக்கும் ஆற்றலை சால்மொனெல்லா கிருமிகளுக்கு வழங்குகின்றன.
DFMO மருந்து,Ornithine Decarboxylase எனும் நொதிபுரதத்தின் (Enzyme)செயல்பாட்டை கட்டுப்படுத்தி,உடம்பின் ஸ்பெர்மிடின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதால்,சால்மொனெல்லா கிருமியை உடம்பின் நோய்எதிர்க்கும் திறன் எளிதில் அழிக்க முடிகிறது.
உடம்பில்(Host)மட்டும் ஸ்பெர்மிடின் அளவைக் குறைத்து,சால்மொனெல்லா கிருமியின் ஸ்பெர்மிடின் உற்பத்தித்திறனை கை வைக்காமல் இருப்பதால்,அவை எளிதில் ஜீன் மாற்றம் அடைவதில்லை.(சால்மொனெல்லா கிருமிகளை இக்கட்டான சூழலுக்கு தள்ளுவதால்,அவை எளிதில் ஜீன் மாற்றம் பெற்று மேலும் பாதிப்புகளை அதிகமாக்கும்.)
DFMO மருந்து டைபாய்டு நோய் சிகிச்சைக்கு உதவும்
DFMO மருந்து,(ஸ்பெர்மிடின் உற்பத்திக்குத் தேவையான அர்ஜீனைன் எனும் அமினோஅமிலம் தேவைப்படுகிறது)அர்ஜீனேஸ் எனும் நொதிபுரதத்தின்(Enzyme)செயல்பாட்டையும் கட்டுப்படுத்துவதால்,ஸ்பெர்மிடின் உற்பத்தியும் குறைகிறது.
இதனால் உடம்பின் Oxidative stressஐ கையாள முடியாமல்,சால்மொனெல்லா கிருமி எளிதில் சாகிறது. இதனால்,ஆராய்ச்சியாளர்கள் DFMO மருந்து டைபாய்டு நோய் சிகிச்சைக்கு உதவும் என கருதுவதுடன்,ஸ்பெர்மிடின் உற்பத்தியை குறைக்கும்,பிற புது கண்டுபிடிப்புகளும்,டைபாய்டு நோயை கட்டுப்படுத்த உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக/இந்திய அரசுகள் இது குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு,டைபாய்டு நோய் சிகிச்சையை மேம்படுத்த முன்வருமா?
நன்றி : டாக்டர் மரு.வீ.புகழேந்தி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://www.youtube.com/@httamil
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்