Benefits of Raw Turmeric : நோய் கிருமிகளை உடலில் நுழைய விடாமல் விரட்டும்! பாலுடன் தினமும் பருக, இதனால் எத்தனை நன்மைகள்?
Benefits of Raw Turmeric : பசு மஞ்சளை பாலில் கலந்து பருகுவதால் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
மஞ்சள் பொடிக்கு இந்திய சமையலறையில் எப்போதும் தனி இடம் உண்டு. அது ஆரோக்கியம் கொடுப்பதுடன், மங்களகரமானதும் என்பதுதான் அதற்கு காரணம். இது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை பல்வேறு ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
குர்குமின் – மஞ்சளில் உள்ள முக்கிய உட்பொருள்
பசு மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள் அத்தனைக்கும், அதில் உள்ள குர்குமின் என்ற உட்பொருள்தான காரணமாகிறது. குர்குமின் என்பது ஒரு பாலிஃபினால், அது ஒரு வகை பைஃட்டோகெமிக்கல், இது தாவரங்களில் காணப்படும். இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சிக்கு எதிரான குணங்களால், இது அறியப்படுகிறது. நாள்பட்ட வீக்கம் மற்றும் ஆக்ஸிடேடிவ் அழுத்தம் ஆகியவைதான் நாள்பட்ட நோய்களுக்கு காரணமாகிறது.
வீக்கத்துக்கு எதிரான சக்திவாய்ந்த குணம்
பசு மஞ்சளில் குர்குமின் உள்ளது, இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இதை வழக்கமாக உணவில் எடுத்துக்கொள்ளும்போது, உடலில் நீண்ட காலமாக உள்ள வீக்கங்களை குறைக்க உதவுகிறது. ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி மற்றும் குடல் வீக்க நோய் ஆகியவற்றை தடுக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட் நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது
பசு மஞ்சளின் குர்குமின் உடலில் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகிறது. செல்கள் இறக்க காரணமான உடலுக்கு தீங்கு விளைவிக்கும், ஃப்ரீரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. நாள்பட்ட நோய்களான புற்றுநோய், இதய நோய் மற்றும் நரம்பியல் நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது
மூளை ஆரோக்கியத்தில் குர்குமின் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கறிது. அல்சீமர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் போன்ற நரம்பியல் நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. பசு மஞ்சளின் வீக்கத்துக்கு எதிரான தன்மை மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள் இந்த நன்மைகளை வழங்குவதாக நம்பப்படுகிறது.
இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது
பசு மஞ்சளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. குர்குமின், ரத்த நாளங்களின் இயக்கத்தை அதிகரிக்கிறது. வீக்கத்தை குறைக்கிறது, கொழுப்பை குறைக்கிறது, ரத்தம் உறைதலை தடுக்கிறது. இதன்மூலம் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
புற்றுநோயை தடுக்கிறது
குர்குமினில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. கட்டிகள் உருவாவதை தடுக்கிறது. சில புற்றுநோய்களால் ஏற்படும் செல் இறப்பையும் தூண்டுகிறது. எனவே தினமும் உணவில் மஞ்சள் சேர்த்துக்கொள்வது புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது
பசு மஞ்சள் பாரம்பரியமாக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. செரிமான என்சைம்கள் உற்பத்திக்கு உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. அஜீரணம், வயிறு உப்புசம், வாயுக்கோளாறுகள் ஆகியவற்றை தடுக்கிறது. குடல் ஆரோக்கியத்திற்கு பசு மஞ்சள் உதவுகிறது. இதனால் குடலில் சமமளவு நுண்ணுயிரிகள் வளர உதவுகிறது.
இயற்கை வலி நிவாரணி
இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், இயற்கை வலி நிவாரணம் கொடுக்கின்றன. பசு மஞ்சளை தினமும் எடுத்துக்கொள்வது, நாள்பட்ட வலியை போக்குகிறது. ஆர்த்ரடிஸ், தசைவலி, பொது உடல் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது. வலியை குறைக்க இயற்கை முறையை தேடுபவர்களுக்கு இது சிறந்த தீர்வு.
சரும ஆரோக்கியம் மற்றும் பொலிவு
பசு மஞ்சளில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் சருமத்துக்கு நன்மை கொடுக்கிறது. முகப்பருக்களை நீக்க உதவுகிறது. சொரியாசிஸ், ஈசிமா போன்ற சரும வியாதிகளையும் குணப்படுத்துகிறது. சரும நிறத்தையும் அதிகரிக்கிறது. சருமம் அதன் இயற்கை நிறத்தை தக்கவைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
பசு மஞ்சளில் உள்ள நோய் எதிர்ப்புத்திறன் உட்பொருட்கள், உங்கள் உடலில் உள்ள எதிர்ப்பாற்றலை பலப்படுத்த உதவுகிறது. இதன் வைரஸ்க்கு எதிரான, பாக்டீரியாக்களுக்கு எதிரான மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான குணங்கள், உடலில் நோய் எதிர்ப்புத்திறனுக்கு உதவுகிறது. இதனால் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
நீரிழிவு நோய் மேலாண்மை
நீரிழிவை குணப்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க பசுமஞ்சள் உதவுகிறது. அது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் தொடர்பான ஆபத்தை குறைக்கிறது. வீக்கத்துக்கு எதிரான மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதற்கு உதவுகிறது.
டாபிக்ஸ்