தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  9 Super Foods : ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு உதவும் 9 சூப்பர் உணவுகள்!

9 Super Foods : ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு உதவும் 9 சூப்பர் உணவுகள்!

Priyadarshini R HT Tamil
Sep 12, 2023 11:02 AM IST

நீண்ட ஆயுளுக்க உதவும் 9 உணவு வகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு வகைகளை சூப்பர் ஃபுட்ஸ் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை எந்தெந்த உணவு என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உடலுக்கு ஊட்டமளிக்கும் 9 சூப்பர் உணவுகள்.
உடலுக்கு ஊட்டமளிக்கும் 9 சூப்பர் உணவுகள்.

ட்ரெண்டிங் செய்திகள்

பெரிகள்

ப்ளு பெரிகள், ஸ்ட்ராபெரிகள் உள்ளிட்ட பெரிகளில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது செல்கள் உடைவதை பாதுகாக்க உதவுகிறது. நாட்பட்ட வியாதிகளை குணமாக்குகிறது.

நட்ஸ்கள் மற்றும் விதைகள்

பாதாம், வால்நட்கள், சியா விதைகள் மற்றும் ஃப்ளாக்ஸ் விதைகள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கிய கொழுப்பு மற்றும் நார்ச்சத்தை கொடுக்கிறது. அது உடல் மற்றும் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

மீன்கள்

சால்மன், மேக்கரீல் மற்றும் சார்டினிஸ் மீன்களில், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளன. அது வீக்கத்தை குறைத்து, இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது.

கீரை வகைகள்

காலே, கீரைகளில் வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளன. அவை இதய நோய் வராமல் தடுத்து, முளை ஆரோக்கியத்தை காக்கிறது.

மஞ்சள் தூள்

மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது. அதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது வீக்கத்துக்கு எதிராக செயல்படுகிறது. இது நாள்பட்ட நோய்களின் ஆபத்துக்களை குறைக்கிறது. மூட்டு ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.

கிரீன் டீ

இதில் கேட்சின்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது செல்களை அழிவிலிருந்து காக்கிறது. இதனால் ஒரு சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

யோகட்

கிரீக் யோகட் அல்லது புரோபயோடிக்குடன் யோகட் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய்

எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயில் மேனோசேச்சுரேடட் கொழுப்புகள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை, இதய நோயை குறைக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. அது நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்